தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

21-05-2017 தமிழகம் மற்றும் புதுச்சேரியின் இன்றைய வானிலை குறித்த தகவல்கள்


21-05-2017 இன்று ஏற்கனவே நாம் இதற்கு முந்தைய பதிவில் தெரிவித்திருந்தது போல தமிழக வட கடலோர பகுதியில் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் வெப்பம்  குறைந்து காணப்பட்டது.

 21-05-2017 இன்று காரைக்காலில் அதிகபட்சமாக 99.5° ஃபாரன்ஹீட் அதாவது 37.5° செல்சியஸ் வெப்பம் பதிவானது.இது நேற்றை விட குறைவு.அதேபோல நாகப்பட்டினத்தில் இன்று அதிகபட்சமாக 101.12° ஃபாரன்ஹீட் அதாவது 38.4° செல்சியஸ்.இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுகையில் வெப்பம் இன்று சற்று குறைவாகவே இருந்தது.

21-05-2017 இன்று புதுச்சேரியில் அதிகபட்சமாக 98.78° ஃபாரன்ஹீட் அதாவது 37.1° செல்ஸியஸ் கடந்த 7 நாட்களில் புதுச்சேரியில் ஒரு நாளில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை அளவில் இதுவே குறைவு.அடுத்த இரண்டு நாட்களுக்கும் இதே வெப்பநிலையோ அல்லது இதற்கு குறைவாகவோ பதிவாகுமேயானால் புதுச்சேரியில் அக்னி வெயில் நிறைவடைந்தது என்று அர்த்தம்.அதன் பின் இந்த மாதத்தில் புதுச்சேரியில் வெப்பம் 104° ஃபாரன்ஹீட்   அதாவது 40° செல்ஸியசுக்கு அதிகமாக பதிவாக வாய்ப்புகள் மிகவும் குறைவு.

21-05-2017 இனி வரக்கூடிய வாரத்தில் தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கும் வாய்ப்புண்டு.

21-05-2017 இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100° ஃபாரன்ஹீட்டுக்கும்  அதிகமான அளவு வெப்பம் பதிவான பகுதிகள்.

திருத்தணி --------------------------> 107.96°
வேலூர் -------------------------->105.44°
பரங்கிப்பேட்டை -------------------------->104°
சென்னை (புறநகர் ) -------------------------->103.64°
கரூர் பரமத்தி --------------------------> 103.28°
திருச்சி -------------------------->101.3°
நாகப்பட்டினம் --------------------------> 101.12°
கோயம்பத்தூர் -------------------------->100.58°
சென்னை (நுங்கம்பாக்கம் )-------------------------->100.58°பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...