24-05-2017 இன்று காரைக்கால் மாவட்டத்தின் திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்தில் அமைந்திருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலய நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.திடீரென ஏற்பட்ட இந்த தீ விபத்தால் தற்பொழுது அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து அரங்கேறியிருப்பதாக கூறப்படுகிறது.
காரைக்காலில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரன்யேஸ்வரர் ஆலயத்தின் சனிப்பெயர்ச்சி திருவிழா இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது.அதனால் வாரத்தின் ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் திருநள்ளாறுக்கு வரும் பக்த்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது.சனிப்பெயற்சிக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வந்த நிலையில் இன்று திடீரென ஏற்பட்ட மின் கசிவால் ஆலய நிர்வாக அதிகாரி அலுவலகத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
25-05-2017 திருநள்ளாறு தேவஸ்தானத்தின் முன் பகுதியில் இருக்கும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையில் 24-05-2017 அன்று தீ விபத்து ஏற்பட்டதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:
கருத்துரையிடுக