தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

வட கடலோர மாவட்டங்களில் வெயில் குறைந்து இருந்தாலும் அதிகமான உடல் வியர்வைக்கு எது காரணம் என்று உங்களுக்கு தெரியுமா ?

25-04-2017 இன்று ஒரு நாளிதழில் செய்தி வெளியிட்டு இருந்தார்கள் "புதுச்சேரியில் மேகமூட்டத்தால் வெயில் குறைந்து இருந்தாலும் வெப்பம் குறையவில்லை " என்று அதில் எழுதியிருந்தார்கள்.ஆம் உண்மை தான் தற்பொழுது வெயிலின் அளவு குறைந்து இருந்தாலும் உடலில் முன்பை விட வியர்வை அதிகமாகியுள்ளது.உட்கார்ந்து இருக்கும் பொழுதே வியர்வை அதிகமான அளவில் வெளியேறுகிறது. இதற்கு முக்கிய காரணம் வெப்பம் அல்ல தற்பொழுது முன்பை விட வெப்பம் குறைந்தே உள்ளது இதெற்கு காரணம் காற்றில் அதிகரித்திருக்கும் ஒப்பு ஈரப்பதமாக (Relative Humidity ) இருக்கலாம்.

உதாரணமாக இப்பொழுது காற்றில் வெப்பநிலையானது 24° செல்ஸியசாக இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் ஒப்பு ஈரப்பதம் 0% சதவிகிதம் என்றால் நீங்கள் 21° செல்சியசை போல உணர்வீர்கள் அதே ஒப்பு ஈரப்பதம் 100% சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது என்றால் நீங்கள் 27° செல்சியஸ் போல உணர்வீர்கள்.தற்பொழுது அது தான் நடந்துள்ளது வழக்கமாக பகல் நேரத்தில் 40 முதல் 50 சதவிகிதம் வரை இருந்த ஒப்பு ஈரப்பதமானது கடந்த சில நாட்களாக 75% சதவிகிதம் வரை உயர்ந்து காணப்படுகிறது.அதைப்போல இரவு நேரங்களில் 90% சதவிகிதம் வரை பதிவாகிறது.நீங்கள் கீழே காணும் படத்தில் சென்னையில் நேற்றும் இன்றும் பதிவான ஒப்பு ஈரப்பதத்தின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளன.சிகப்பு நிறத்தில் இருப்பது நேற்றைய அளவு நீல நிறத்தில் இருப்பது இன்றைய அளவு.இயல்புடன் ஒப்பிடுகையில் நேற்றைய அளவே அதிகம் என்று எடுத்துக்கொண்டால் இன்று அதை விட அதிகமாக பகல் நேரத்தில் பதிவாகியிருப்பதை நீங்களே காணலாம்.அப்பொழுது உடலில் வியர்வை அதிகமாக வெளியேற தானே செய்யும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...