தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

26-05-2017 வங்கக்கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

சில தினங்களுக்கு முன் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்பு இருப்பதாக முன்பே ஒரு பதிவில் தெரிவித்து இருந்தேன்.அதன்படி 25-05-2017 நேற்று வங்கக்கடலில் அந்தமான் மற்றும் தமிழகத்துக்கு இடையில் ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி இருந்தது இது தற்பொழுது வலு பெற்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். வருகின்ற 27-05-2017 அல்லது 28-05-2017 ஆம் தேதிகளில் அந்தமானின் வட மேற்கு திசையில்இது ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக  உருவாக வாய்ப்பு உள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வட கிழக்கு திசையை நோக்கி அதாவது மியான்மர் அல்லது வாங்க தேசத்தை நோக்கி நகரவே அதிக வாய்ப்புகள் உள்ளது அதனால் இம்முறையும் அது சக்தி வாய்ந்த புயலாக மாறி மியான்மர் அல்லது வங்கதேசம்  அருகே 30-05-2017 அல்லது 01-06-2017 ஆம் தேதிகளில் கரையை கடக்கக்கூடும்.

இது தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளை பொறுத்த ஒரு கணிப்புதான் திடீரென ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்து இது தமிழகத்தை நோக்கி தனது திசையை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு தான்.


இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட கிழக்கு திசையில் நகர்கையில் சென்னை ,புதுச்சேரி உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் 27-05-2017 அல்லது 28-05-2017 ஆகிய தேதிகளில் மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...