தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

29-05-2017 திருவாரூர் தியாகராஜர் ஆழி தேரோட்ட திருவிழா - ஆசிய கண்டத்தின் மிகப்பெரிய தேர்

 திருவாரூரில் பிறந்தாலே முக்தி என்பார்கள் திருவாரூர் நகருக்கு அப்பேற்பட்ட பெருமை மிக்க சிறப்பை ஏற்படுத்தி தந்திருப்பது நகரின் மைய பகுதியில் அமைந்திருக்கும் தியாகராஜசுவாமி கோயில் என்று சொன்னால் அது மிகையாகாது. ஆம் இத்திருக்கோயில் தான் பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாக கருதபப்டுகிறது.அது மட்டுமின்றி சமய குறவர்கள் நாலவராலும் பாடல் பெற்ற ஸ்தலம் என்ற பெருமையும் இதெற்கு உண்டு மேலும் இத்திருக்கோயில் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் இருந்து வருகிறது.

வருகின்ற 29-05-2017 (மே மாதம் 29 ஆம் தேதி ) திருவாரூர் தியாகராஜர் ஆழி தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது.அதற்காக ,தியாகராஜர் சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடைபெற்றது.வருகின்ற 28-05-2017 அன்று காலை 5:00 மணிக்கு விநாயகர் மற்றும் சுப்புரமணியர் தேரோட்டமும் அதனையடுத்து 29-05-2017 நன்று காலை 7:00 முதல் 7:30 மணிக்குள் புனர்பூச நட்சத்திரத்தில் ஆழி தேரோட்டமும் நடைபெற இருக்கிறது.இந்த தேரோட்டத்தில் தமிழகம் மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

திருவாரூர் தேரின் சிறப்பு 

திருவாரூர் தியாகராஜசுவாமி கோயில் தேரானது  ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்று அழைக்கபப்டுகிறது.இதற்காக இந்த ஆண்டு 30 அடி உயரமும் ,30 அடி அகலமும் 220 டன் எடையும் கொண்ட ஆழித் தேரை 96 அடி  உயரம் வரை மூங்கில் மற்றும் பனஞ்சப்பைகள் கொண்டு அலங்கரித்து திட்டத்திட்ட 300 டன் எடையுடன் தேரோட்டத்துக்கு தயார் படுத்தப்பட்டுள்ளது .

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...