தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

30-05-2017(மே 30) ல் தமிழகத்தில் உள்ள 30,000 மருந்துக் கடைகள் மூடப்படும் - தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவிப்பு

21-05-2017 நேற்று திருச்சியில் நடந்த தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கத்தின் மாநில மற்றும் மாவட்ட கூட்டத்தில் வருகின்ற மே 30 ஆம் தேதி (30-05-2017) அன்று தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மருந்துக் கடைகளை மூடி போராட்டம் நடத்த தீர்மான நிறைவேற்றப்பட்டது.


பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் கே.கே.செல்வன் இந்திய அரசு நாடெங்கிலும் ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்யும் திட்டத்தை அனுமதிக்கும் சட்ட மசோதாவை விரைவில் கொண்டுவர உத்தேசித்துள்ளது.அவ்வாறு ஆன்லைன் மூலம் மருந்து விற்பனை செய்வதால் போலி மருந்துக்களின் விற்பனை அதிகரிக்க வாய்ப்புள்ளது அது மட்டுமின்றி இதனால் நாடு முழுவதும் 8 லட்சம் மருந்து வணிகர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் ஆகையால் வருகின்ற 30-05-2017ல் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள 30,000 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டு ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் தமிழகத்தில் உள்ள 30,000 மருந்துக் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தாலும் மருத்துவமனைகளில் உள்ள மருந்துக்கடைகள் அனைத்தும் வழக்கம்போல இயங்கும் என்றும் அத்தியாவசிய மருந்துக்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்யபப்டும் எனவும்  தெரிவித்துள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...