தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி அருகே 8,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கற்கால கருவிகள் கண்டெடுப்பு

புதுச்சேரியில் இருந்து திட்டத்திட்ட 75 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது தான் நடியப்பட்டு கிராமம்.கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம்  - முத்தாண்டிக்குப்பம் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து சுமார் 23 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது தான் நடியப்பட்டு கிராமம்.இந்த கிராமத்துக்கு நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் இருந்தும் விரைவாக செல்ல முடியும்.

நடியப்பட்டு கிராமப்பகுதிகளில் நுண் கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.நடியப்பட்டு அய்யனார் கோயில் அருகே மேற்கொள்ளப்பட்ட இந்த கள ஆய்வில் கோயிலின் கிழக்கே உள்ள பெரிய ஓடையின் மேற்கு கரையை ஒட்டிய பகுதியில் வெள்ளை நிற குழாங்கற்களால் தயாரிக்கப்பட்ட சிறிய வகை கற்கருவிகள் மண்ணின் மேற்பரப்பிலிருந்து சேகரிக்கப்பட்டன.சுமார் 4 கி.மீ பரப்பளவில் நடத்தப்பட்ட இந்த கள ஆய்வில் சிறிய அளவிலான கூர் முனை கருவிகள் ,கற் சீவல்கள் ,செதுக்கு கருவிகள் ,கை கோடாரி ,கத்திகள் ,சுரண்டுகள் ,தட்டு வடிவ கற்கருவிகள் ,பிறை வடிவ கருவிகள் உள்ளிட்டவைகள் கிடைத்தன இவை னைத்தும் பொருட்கள் மட்டுமல்லாது ஒளி ஊடுருவக் கூடிய ஸ்படிக வகை குழாங்கற்களில் இருந்து செய்யப்பட்டவை எனவும் இவை 8,000 ஆண்டுகள் பழமையானவை எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.மேலும் கடலூர் மாவட்டத்தின் ஒட்டன்குப்பம்,பத்திரக்கோட்டை உள்ளிட்ட பல பகுதிகளிலும் ஆதி கால மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் பரவி கிடக்கின்றன என வரலாற்று ஆய்வாளர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஆத்தூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை உதவி பேராசிரியரும்  வரலாற்று ஆய்வாளருமான ஜெ.ஆர்.சிவராமனுக்கு நடியப்பட்டு கிராமத்தை சார்ந்த மாணவர்கள் கூழாங்கற்கள் ,குவாட்சைட் போன்ற கற்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சில பழங்கால பொருட்களை அனுப்பிவைத்தனர். அதன் அடிப்படியிலேயே இந்த பகுதியில் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

மொழியியல் தொடர்பான ஆராய்ச்சிகள் இன்னும் அங்கு மேற்கொள்ளப் படவில்லை அவர்கள் எந்த மொழியை தொடர்புகொள்ள பயன்படுத்தி வந்தார்கள் என்பதற்கான ஆதாரங்களை தேடினால் அது கண்டிப்பாக தமிழாக தான் இருந்திருக்க முடியும்.11,000 ஆண்டுகளுக்கு முன்பே பூம்புகார் நகரம் இருந்திருக்க வேண்டும் என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில்  தெரியவந்துள்ளது.இப்படி தமிழகம் முழுவதும் தமிழ் பேசிய மனிதன் ஆதி காலம் தொட்டே வாழ்ந்து வந்ததற்கான ஆதாரங்கள் ஏராளம்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...