தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் காஸ்டிக் சோடா உற்பத்தி நிலையம்

நாகை மாவட்டம் வேதாரண்யம் ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் ஆரவாரமற்ற அமைதியான நகரமாக இருந்து வந்தது.வேதாரண்யம் என்பதின் தமிழ் பெயர் திருமறைக் காடு என்பதாகும்.கோயில்களும் வழிபாட்டு தளங்களும் நிறைந்திருக்கும் இந்நகரத்திற்கு கிழக்கே வேதாரண்யம் கடற்கரையும் தெற்கே வெறும் 12 கி.மீ தொலைவில் கோடியக்கரை வெப்ப மண்டல காடுகளும் அமைந்துள்ளன.காரைக்காலில் இருந்து திட்டத்திட்ட 68 கி.மீ தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து 50 கி.மீ தொலைவிழும் அமைந்துள்ள உப்பளங்கள் நிறைந்த இந்த நகரத்தில் தற்பொழுது இயற்க்கை வழங்கல் சூறையாடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தமிழக கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 'காஸ்டிக் சோடா ' உற்பத்தி செய்யும் ஆலை அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என கூறியுள்ளார்.மேலும் இதனால் நேரடியாகவும் மறைமுகமாகவும் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் இந்த உற்பத்தி நிலையம் அமைக்க வேதாரண்யம் அருகே உள்ள தென்னாடர் என்ற கிராமத்தில் 157 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு தனியார் உதவியுடன் விரைவில் அங்கு காஸ்டிக் சோடா உற்பத்தி ஆலை அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

எண்ணற்ற வளங்கள் நிறைந்த மாவட்டமாக இருந்தும் நாகப்பட்டினம் மாவட்டம் தமிழகத்தில் வளர்ச்சி குன்றிய மாவட்டமாக இருந்து வருகிறது அந்த மாவட்டத்திலேயே வேதாரண்யம் மிகவும் பொருளாதார வளர்ச்சி குன்றிய பகுதியாக இருந்து வருகிறது.தற்பொழுது இருக்கும் சூழ்நிலைகளில் வேலைவாய்ப்பை பெருக்க இதைப்போன்ற ஒரு தொழிற்சாலை அப்பகுதிக்கு தேவைதான் ஆனால் இதனால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.இந்த ஆலையில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வேதாரண்யம் பகுதி மக்கள்  முன் வைக்கின்றனர்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...