தற்போதைய சென்னை - புதுச்சேரிக்கு இடையிலான ரயில் பாதை திட்டத்திட்ட 200 கி.மீ தொலைவு கொண்டதாக உள்ளது அதாவது சென்னையில் இருந்து ரயில் பயணம் செய்பவர்கள் திண்டிவனம் - விழுப்புரம் விழியாகத்தான் புதுச்சேரியை அடைய வேண்டிய நிலை உள்ளது.இதனால் பயன நேரம் அதிகரிப்பதுடன் பயணிகளின் வீண் சிரமத்துக்கும் வழி வகுக்கிறது. சென்னையில் இருந்து பேருந்துகளில் கிழக்கு கடற்கரை சாலை வழியாக பயணம் செய்தால் வெறும் 160 கி.மீ தூரத்திலேயே புதுச்சேரியை அடைந்து விடலாம். இதனால் சென்னையில் இருந்து புதுச்சேரி கடலூருக்கு கிழக்கு கடற்கரை மார்க்கமாக ஒரு
புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களுக்கு
முன்புலிருந்தே புதுச்சேரி மற்றும் கடலூர் பகுதி மக்களிடம் இருந்து வந்தது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புதுச்சேரி முதல்வர் திரு நாராயணசாமி சென்னை - மாமல்லபுரம் - புதுச்சேரி -கடலூர் புதிய ரயில் பாதை திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார் இத்திதிடமானது தமிழக அரசுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப் படும் எனவும் அவர் கூறியுள்ளார்.மேலும் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதுச்சேரியில் மாட்டிறைச்சி தடை சட்டம் அமல்படுத்தப்படாது எனவும் அதற்காக விரைவில் புதுச்சேரி சட்டசபையில் ஒரு புதிய சட்டம் இயற்றப்படும் எனவும் தெரிவித்துள்ளார் .

0 comments:
கருத்துரையிடுக