தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

14-05-2017 அன்று சென்னையில் சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம் - தமிழகத்தின் 7.63 கி.மீ தூர முதல் சுரங்கப்பாதை ரயில் சேவை

திருமங்கலம்  - நேரு பூங்கா  இடையே 7.63 கி.மீ தொலைவு கொண்ட தமிழகத்தின் முதல் நீண்ட தூர சுரங்கப்பாதை ரயில் சேவை வருகின்ற 14-05-2017 அன்று தொடங்க இருக்கிறது.சென்னை மாநகராட்சியில் மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாக தொடர்ந்து அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையினால் மாநகராட்சி சாலைகளில் அடிக்கடி போக்குவரத்துக்கு நெரிசல்கள் ஏற்பட்டு சில நேரங்களில் சாலையில் பயணம் செய்வோர் பல மணி நேரம் காத்திருந்து தங்கள் பயணத்தை தொடர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இதனால் சிலர் அதிகப்படியான மன உளைச்சலுக்கும்  ஆளாகின்றனர்.அப்படி சென்னையில் அடிக்கடி ஏற்படும் சாலை  நெரிசல்களை தவிர்ப்பதற்காக கொண்டுவரப்பட்டது தான் சென்னை மெட்ரோ ரயில் சேவை திட்டம் ஆனால் அந்த திட்டப் பணிகளை அரசு செயல்படுத்திய பொழுது மக்கள் அனுபவித்த அவஸ்தைகள் கொஞ்சம் நெஞ்சமல்ல எங்களுக்கு மெட்ரோ ரயிலே வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு சென்னை மக்கள் பல இன்னல்களை சந்திக்க நேர்ந்தது.

இந்நிலையில் திருமங்கலம்  - நேரு பூங்கா இடையேயான 7.63 கி.மீ சுரங்கப்பாதையில் திருமங்கலம் ,அண்ணாநகர் டவர் ,அண்ணாநகர் கிழக்கு ,ஷெனாய்நகர் ,பச்சையப்பன் கல்லூரி ,கீழ்ப்பாக்கம் ,நேரு பூங்கா என 7 ரயில் நிலையங்களை உள்ளடக்கிய இந்த சுரங்கப்பாதை மெட்ரோ ரயில் சேவை வருகின்ற மே 14ஆம் தேதி தொடங்க உள்ளது. .மாற்றுப்பாதை, ஒருவழிச்சாலை, சாலையில் திடீர் பள்ளம் ,என்னைக்கசிவு என மெட்ரோ ரயில் திட்டத்தால் பல இன்னல்களை தொடர்ந்து சந்தித்து வந்த சென்னை வாசிகளுக்கு இந்த புதிய சுரங்கப்பாதை ரயில் சேவை பலனளிக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...