தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சென்னை உணவு பொருட்களின் தரம் குறித்து வாட்சப்பில் புகார் தெரிவிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் அதிரடி

சென்னை மாநகர் இந்தியாவின் நான்றாவ்து பெரிய நகரம்  கடந்த 2011 ஆம் வெளியிட்ட தகவலின் படி சென்னை மெட்ரோவில் திட்டத்திட்ட 90 லட்சம் மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டது ஆனால் வெளியூர்களில் இருந்து   இங்கு வந்த பல்வேறு காரணங்களுக்காக தங்கியிருப்பவர்களையும் தினமும் வந்து செல்லும் மக்களின் எண்ணிக்கையையும் சேர்த்தால் தற்பொழுது ஒரு நாளில் தோராயமாக 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் சென்னையில் புழங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .426 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட ஒரு  மாநகரில் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் நிறைந்திருப்பது என்பது மிகவும் அதிகம்.தமிழகத்தின் மொத்த பரப்பளவு 1,30,060 சதுர கி.மீ அதன்படி பாரத்தால் சென்னையின் பரப்பளவு ஒட்டு மொத்த தமிழகத்துடன் ஒப்பிடுகையில் வெறும் 0.3% சதவிகிதம் தான் ஆனால் தமிழகத்தின் மக்கள் தொகையில் 8 இல் ஒரு மடங்கு மக்கள் சென்னையில் வாழ்கின்றனர் திட்டத்திட்ட 7 இல் ஒரு மடங்கு மக்கள் நாள்தோறும் சென்னையில் புழங்கி வருகின்றனர்.இந்நிலையில் சென்னை மாவட்டத்தை விரிவுபடுத்தி பல்லாவரம் ,தாம்பரம் மற்றும் ஆவடி என இன்னும் மூன்று மாநகராட்சிகளை உருவாக்க அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இப்படி பெருகிவரும் மக்கள் தொகையினாலும் மக்களின் வாழ்க்கைத் தரத்தில் சமநிலையான போக்கை ஏற்படுத்த தவிறியதாலும்  உணவு பொருட்களின் தேவை அதிகரித்துள்ளது இதனால் உணவு பொருட்களின் விலையும் மலையென உயர்ந்துள்ளது.இன்று ஒரு உயர் தர சைவ உணவகத்தில் 2 இட்லிக்களின் விலை 30 ரூபாய் என நிர்ணயித்திருக்கிறார்கள் சில உணவகங்களில் இதற்கும் அதிகமான விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.ஆனால் 30 ரூபாய் கொடுத்து இட்லி வாங்கி சாப்பிடும் அளவுக்கு அனைவரின் வாழ்க்கை தரமும் அங்கு உயர்ந்து விட வில்லை.அதனால் அவர்கள் சாலை ஓரங்களில் இருக்கும் மலிவு விலை உணவகங்களை நாடி செல்கின்றனர்.அங்கு சில கடைகளில் சில நேரங்களில் உயர்தர உணவகங்களை விட குறைந்த விலையில் நல்ல உணவும் கிடைக்கிறது அதே சமயம் ஒரு சில உணவகங்களில் பெருகிவரும் விலை வாசியால் தரமற்ற பொருட்களை  உபயோகித்து உணவு பொருட்கள் தயார் செய்யப்படுகின்றன.ஒரு சில உயர்தர உணவகங்களிலும் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி ருசியான உணவு பொருட்களை தயாரிப்பதாகவும் புகார்கள் சமூக ஊடகங்களில் நிறைந்து கிடக்கின்றன.

இந்நிலையில் தற்பொழுது சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தரமில்லாத குடிநீர் கேன்கள் ,தரமற்ற தயிர் ,மோர்  பாக்கெட்டுகள் ,குளிர் பானங்கள் உள்ளிட்டவை குறித்தும் கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைத்த மாம்பழங்கள் தொடர்பாகவும் வாட்சப்பில் புகார் வழங்கலாம் என அதிரடியாக அறிவித்துள்ளார்.

அதன்படி சென்னை மாவட்டத்தில் தரமில்லாத உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்த புகார்களுக்கு

வாட்ஸ்ஆப் எண்  : 9444042322
தொலைப்பேசி எண்  : 044-23813095
இமெயில் முகவரி  : commrfssa@gmail.com

உள்ளிட்டவைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி தங்களது புகார்களை பதிவு செய்யலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...