தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆர்டர் செய்தால் போதும் வீடுதேடி வரும் மதுபானங்கள் -மதுபாட்டில்கள் டோர் டெலிவரி - தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உருவாகியிருக்கும் புதிய தொழில்

உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இயங்கிவந்த மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன.மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடங்களில் திறக்க சிலர் முயற்சி எடுத்து வந்த போதிலும் பொதுமக்களின் தொடர் போராட்டங்களாலும் எதிர்பாலும் மாற்று இடங்களை தேர்வு செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மூடப்பட்ட மதுக்கடைகளை திறப்பது என்பது மிகவும் சவால்கள் நிறைந்த ஒரு விஷயமாக மாறிவிட்டது. நெடுஞ்சாலைகளில் இருந்த மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளில் எண்ணிக்கை குறைந்து இருந்தாலும் மது அருந்தோவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை நெடுஞ்சாலைத்  தவிர  மற்ற இடங்களில் திறந்து இருக்கும் மதுக்கடைகளை நோக்கி குடிமகன்கள் கூட்டம் படையெடுக்க ஆரம்பித்தது.இது என்னடா இது புது பிரச்சனை ஆரம்பிச்சிட்டுனு ஆத்திரமடைந்த அப்பகுதி மக்களும் வீதியில் இறங்கி போராட ஆரம்பித்து விட்டனர்.இந்நிலையில் இந்த பிரச்சனைகள் அனைத்தையும்  பயன்படுத்திக் கொண்டு வியாபார எண்ணத்தோடு தமிழகத்தின் பல நகரங்களில் சிலர் புதிய தொழிலையும் தொடங்கியுள்ளனர்.அது என்னது அந்த புதிய தொழில் ? என்று கேட்கிறீர்களா அது ஒன்றும் இல்லை நீங்கள் மதுவகைகளை ஆர்டர் செய்தால் பொது அது உங்கள் வீடு தேடி வந்துவிடும் இனி நீங்கள் மதுக்கடையை தேடி அலைந்து கூட்டத்தில் வரிசையில் நின்று மதுபானங்களை வாங்க தேவையில்லை.

தற்பொழுது தமிழகத்தில் பல இடங்களில் இதைப்போன்ற தொழில்கள்  வெளியில் தெரியாமல் நடந்து வந்தாலும் ஈரோடு நகரில் 'பிக் அண்ட் டிராப் ' என்கிற நிறுவனம் சேவை கட்டனத்துடன் இந்த மது பாட்டில்கள் டோர் டெலிவரி சேவையை வழங்கி வருகிறது.ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவு பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் தொழிலை செய்து வந்த அந்த நிறுவனம் தற்பொழுது மதுபாட்டில்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்யும் சேவையையும் கட்டணத்துடன் வழங்கி வருகிறது.ஆம் முழு ,அரை அல்லது கால் என எந்த வகை பாட்டில்கள் ஆனாலும் ஒரு பாட்டிலுக்கு ₹80 ரூபாய் என்ற கட்டணத்துடன் இந்த சேவையை தற்பொழுது வெற்றிகரமாக வழங்கிவருகிறது அந்த நிறுவனம்.

இந்த சேவைக்கு ஈரோடு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து இருப்பதாக அந்நிறுவன ஊழியர்கள் ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த சேவையை ஈரோடு முதல் பவானி வரை விரிவு படுத்த திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இது சரியான ஒன்று தானா உணவு பொருட்களை வீட்டிற்கே சென்று டோர் டெலிவரி செய்வதுபோல மதுவகைகளையும் செய்ய சட்டத்தில் இடம் உள்ளதா ? இதெற்கான பதிலை மாநில அரசு தான் வழங்க முடியும்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...