தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் கடல்நீரை குடிநீராக மாற்றும் திட்டம் -சிங்கப்பூர் நிறுவனத்துடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை

புதுச்சேரி மாநிலத்தில் கடல்நீரை குடிநீராக மற்றும் திட்டம் தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனத்துடன் இன்று முதல்வர் நாராயணசாமி ஆலோசனை செய்துள்ளார்.சிங்கப்பூர் பொறியாளர்கள் என்கிற நிறுவனத்தின் பிரதிநிதிகள் 02-05-2017 இன்று சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமியை சந்தித்து 20 மில்லியன் லிட்டர் கடல் நீரை குடிநீராக மாற்றும் திட்டம் குறித்து செயல் விளக்கம் காண்பித்தனர்.

தற்பொழுது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் கடக்கும் வறட்சி நிலவி  வருவதால் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் குடிநீருக்காக நிலத்தடி நீரை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த இரு மாவட்டங்களும் கடற்கரை ஓரங்களில் அமைந்து இருப்பதால் நிலத்தடி நீருடன் உப்பு நீர் கலக்க வாய்ப்புள்ளது.அதனால் நிலத்தடி நீரின் தேவையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் குறித்து முதல்வர் நாராயணசாமி நடத்தி வரும் ஆலோசனை மிகவும் முக்கியதத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி சிங்கப்பூர் பொறியாளர்கள் என்கின்ற இந்த நிறுவனம் உலகில் பல்வேறு நாடுகளில் கடல்நீரை குடிநீராக மற்றும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது புதுவையிலும் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்தும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்துவது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர் என்று அவர் கூறினார் மேலும் அவர் நிதி தொடர்பாக பேசுகையில் குடிநீர் மற்றும் கழிவு நீர் மேம்பாட்டுக்காக பிரான்சு நாடு அரசு நிதி உதவி வழங்கி வருகிறது அதில் இத்திட்டத்தை செயல்படுத்த ஆலோசிக்கப்படும் என்றும் மத்திய,மாநில அரசுகளும் இதற்கு நிதி ஒதுக்கலாம் என்றும் தெரிவித்தார்.





பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...