தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

உயிர் பிழைத்து வாழவேண்டுமெனில் 100 ஆண்டுகளில் பூமியை விட்டு வெளியேறி விட வேண்டும் - பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் தகவல்

ஸ்டீபன் ஹாக்கிங் என்று உலகின் பெரும்பாலான மக்களால் அறியப்படும்  ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் (Stephen William Hawking )பற்றி உங்கள்  அனைவருக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன்.இவர் ஒரு கோட்பாட்டு இயற்பியலாளர்.இயற்பியலில் அரவமுள்ள எவருக்கும் இவரின் கோட்பாடுகளைப் பற்றி தெரியாமல் இருக்க முடியாது .அண்டவியல் (Cosmology ) துறையில் இவரது  பனி இன்றியமையானது .கருங்குழிகளில்  (Black Holes ) ஒளி (light ) உட்பட எதுவுமே வெளியேற முடியாது என்று அனைவரும் நம்பி வந்த நிலையில் கருங்குழிகளில் இருந்து ஒரு வகையான துகள்கள் வெளிப்படுகின்றன என்றும் அதனால் அவை காலப்போக்கில் காணாமல் போய்விடுகின்றன என்றும் இவரது ஆராய்ச்சி காட்டியது.இவ்வெளியேறும் கற்றைக்கு ஹாக்கிங் கதிர்வீச்சு என்று பெயர்.
 இவர் எழுதிய A Brief History Of Time  மற்றும் The Universe in a Nutshell ஆகிய புத்தகங்கள் உலகளவில் அதிகமாக விற்பனையாகி சாதனைப் படைத்துள்ளன.

அவருடைய ஆராய்ச்சிகள் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் நேரம் கிடைக்கும் பழுது வேறொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.தற்பொழுது வளிமண்டலத்தில் அதிக அளவு மாசு ஏற்பட்டு வருவதாலும் பருவ நிலை மாற்றத்தினாலும் பூமிக்கு ஆபத்து ஏற்பட்டுவருகிறது.இதனை கட்டுப்படுத்தவும் பருவ நிலை மாற்றத்தை தடுக்கவும் உலக அளவில் மாநாடுகள் மட்டும் கூட்டங்கள் நடத்தப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.உலகின் மூத்த விஞ்ஞானிகளில் ஒருவரான ஸ்டீபன் ஹாக்கிங்கும் இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்டு உள்ளார் இந்நிலையில் இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆவணப்படத்தில் அதிகரித்து வரும் மக்கள் தொகை ,பருவநிலை மாற்றம் மற்றும் நோய் தொற்றுகளில் இருந்து தப்பி உயிர் வாழ வேண்டும் என்றால் இன்னும் 100 ஆண்டுகளுக்குள் பூமியை விட்டு மனிதர்கள் காளி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் மேலும் மனிதர்கள் வாழ தகுதியான மாற்று கிரகங்களை பற்றி தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மனிதர்கள் அங்கு சென்று உயிர் வாழ ஆயுத்தமாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற ஒரு மூத்த விஞ்ஞானி இப்படி கூறியிருப்பது மனித குலத்துக்கான ஒரு எச்சரிக்கையாகவே உலகெங்கும் பார்க்கப்படுகிறது.

இதோ ஸ்டீபன் ஹாக்கிங்கின் அந்த ஆவணப்படம் தொடர்பான காணொளிக்காட்சி உங்களுக்காக


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...