தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி,காரைக்கால் பகுதிகளில் கால்சியம் கார்பைடு (CaC2) உதவியுடன் பழுக்க வைத்த பழங்களின் விற்பனை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2016ஆம் ஆண்டு வட கிழக்கு பருவமழை  பொய்த்ததால் இந்த ஆண்டு மா,வாழை உள்ளிட்ட பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது ஆகையால்  புதுச்சேரி, காரைக்கால், நாகை, கடலூர் மற்றும் சென்னை போன்ற பகுதிகளில் அப்பழங்களின் வரத்தும் கணிசமான அளவு குறைந்துள்ளது.இந்நிலையில் கால்சியம் கார்பைடு (CaC2) உதவியுடன் பழுக்க வைத்த பழங்களின்  விற்பனை வழக்கத்தை விட அதிகரித்து இருப்பதாக செய்திகள் பரவி வருகின்றன.

சேலம்,தருமபுரி,ஈரோடு,கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு சில பகுதிகளில் சூராவளி காற்றுடன் மழை பெய்ததாகவும்  அதனால் மரங்களில் இருந்த மாங்காய்க்கள் அனைத்தும் முழுமையாக பழுப்பதற்கு முன்னராகவே காற்றின் வேகத்தால் தரையில் கொத்துக்கொத்தாய் விழுந்து கிடந்ததாகவும் கூறப்பட்டது அதுமட்டுமல்லாமல் அப்பகுதிகளில் சில தினங்களுக்கு முன் 1 கிலோ மாங்காய் 1 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.இது இயற்கையாக நடந்தது ஆனால் சில இடங்களில் 100% முதிர்ச்சி அடைவதற்கு முன்னரே அதாவது 70% முதல் 80% முதிர்ச்சியை எட்டிய  உடனேயே பழங்களை மரத்தில் இருந்து பறித்து விடுகின்றனர் அப்படி பாதியில் பறிக்கப்பட்ட பழங்கள் தாமாகவே பழுப்பதில்லை இயற்கை முறையில் சிலர் வைக்கோல்கள் உதவியுடன் அந்த பழங்களை பழுக்க வைக்கிறார்கள் ஆனால் ஒரு சில இடங்களில் மாங்காய்,வாழைக்காய் உள்ளிட்ட பழங்களை பழுக்க வைக்க ரசாயன கல் என்று கூறப்படும் கால்சியம் கார்பைடு (CaC2) கட்டியை பயன்படுத்துகின்றனர்.

பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு (CaC2) எப்படி பயன்படுத்தப்படுகிறது ?
கால்சியம் கார்பைடு (Calcium Carbide (CaC2) ) கட்டியை தண்ணீரில் கலந்து மாங்காய் போன்ற முழுமையாக முதிர்ச்சியடையாத பழங்களை அதில் போட்டு நனைத்து எடுத்தால் சில மணி நேரங்களிலேயே நல்ல பழுத்த பழங்களை போல காட்சியளிக்கின்றன.


கால்சியம் கார்பைடு (CaC2) பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பது சரியான முறைதானா ? 
இல்லை,உலகின்  பெரும்பாலான நாடுகளிலும் இதைப்போன்ற முறைகள் தடை செய்யப்பட்டுள்ளன இந்தியா,பாகிஸ்தான்,பங்களாதேஷ் போன்ற நாடுகளில் தான் இவை அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பழங்களில் கால்சியம் கார்பைடு பயன்படுத்தப்பட்டு இருப்பது சோதனையின் பொழுது உறுதியானால் வெளிநாடுகளில் இருந்து அந்த பழங்களை திருப்பி அனுப்பிவிடுவார்கள் இதைபோல சமீப காலங்களில் பலமுறை நடந்திருக்கிறது.


பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு (CaC2) பயன்படுத்தப் படுவதினால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன ?
கால்சியம் கார்பைடில்   (CaC2) இருந்து வெளிப்படும் அசித்தலின் (Acetylene) வாயு நரம்பு மண்டலங்களை பாதிப்புக்கு உள்ளாக்கி அதன் மூலமாக மூளைக்கு செல்லும் பிரானவாயுவின் (Oxygen) அளவை குறைக்கிறது அதுவே தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் ஹைபோக்சியாவுக்கு  (Cerebral hypoxia) வாய்ப்புள்ளது மேலும் கார்பைடு (carbide )ஆரம்பகாலத்தில் தலைவலி ,மயக்கம்,வாந்தி ,பேதி,வாய்ப்புண் போன்ற அறிகுறிகளை வழங்குகிறது அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதை உட்கொள்ளும் பொழுது ஞாபக மறதி ,நினைவுத்திறன் குறைதல் ,தூக்கமின்மை உள்ளிட்டவைகள் ஏற்படும்  வாய்ப்பும்  உள்ளது அதுவே தொடரும் பட்சத்தில் நாளடைவில் கேன்சருக்கு வழிவகுக்கிறது இந்த அனைத்தும் பிரச்சனைகளும் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது ஏற்படுவது கிடையாது.

கால்சியம் கார்பைடு  ஆர்சனிக் (Arsenic) அல்லது பாஸ்பரஸ் (Phosphorus) விஷமாகுதலின் ஆரம்ப கால அறிகுறிகள் கண் மற்றும் தோல் எரிச்சல்,தொண்டைப்புண்,சளி,நாக்கு எரிச்சல் போன்றவையாகும் இது தொடர்ந்தால் நாளடைவில் நுரையீரல் புற்றுநோய்க்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கால்சியம் கார்பைடு (CaC2) பயன்படுத்தி பழுக்க வைத்த பழங்களை கர்பிணிப்பெண்கள் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன ?
கால்சியம் கார்பைடு (CaC2) பயன்படுத்தி பழுக்க வைத்த பழங்களை கர்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிடுவதால் கருச்சிதைவுக்கும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது மேலும் பிறக்கும் குழந்தைக்கு இதனால் பாதிப்பு ஏற்ப்படலாம் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.


கால்சியம் கார்பைடு (CaC2) பயன்படுத்தி பழுக்க வைத்த பழங்களை  எப்படி இனம் காண்பது ?
மாம்பழங்களை வாங்கி தண்ணீரில் போட்டு வைக்கும் பொழுது அது இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட மாம்பழங்கள் என்றால் தண்ணீரில் மூழ்கி விடும் அதே கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் என்றால் அது தண்ணீரில் மிதக்கும்.
கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட பழங்களில் ஒரு சில பகுதிகள்  நன்றாக பழுத்தும் ஒரு சில பகுதிகள் காயாகவும் இருக்கும்.பழத்தை உண்ணும் முன்னரே இதை கண்டுபிடிப்பது கொஞ்சம் சிரமம் தான் ஆனால் எந்த பழமாக இருந்தாலும் வாங்கியப் பின் ஒரு மணி நேரமாவது சாதாரண தண்ணீரில் போட்டு ஊறவைத்து பிறகு கழுவி சாப்பிடுவது நல்லது.


என்ன தான் அரசு இதைப்போன்ற தவரான செயல்களை தடுக்க தொடர்ந்து முனைப்புக் காட்டி வந்தாலும்.பொது மக்களாகிய நாம் இதைப்போன்ற விஷயங்களை கண்டும் காணாமல் இருப்பது வேதனைக்குரியது.கால்சியம் கார்பைடு பயன்படுத்திய பழங்களை யாரவது விற்பனை செய்தால் அதை உணவு பாதுகாப்புத்துறைக்கு தெரியப்படுத்துவது நமது கடமை.கால்சியம் கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கும் பழங்களால் இவ்வளவு பாதிப்புகள் இருக்கும் என தெரிந்தால் வியாபாரிகளே அதனை விற்பனை செய்ய முன் வரமாட்டார்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...