தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகப்பட்டினம் ,காரைக்கால் மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் உணவு பொருட்களின் தரம் குறித்து எப்படி புகார் தெரிவிப்பது ?

சமீப காலமாக சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இணையாக தமிழகம்  மற்றும் புதுச்சேரியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களிலும் உணவகங்களை தேடி சென்று குடும்பத்துடன் உணவு உண்ணும் மக்களின் விகிதம் அதிகரித்து வருகிறது.சுவையான உணவகங்களை தேடி படையெடுக்கும் மக்கள் கூட்டம் அதிகரித்ததால் இன்று உணவாக தொழில் என்பது அதிக லாபம் ஈட்டி தரக்கூடிய ஒரு தொழிலாக மாறிவிட்டது.ஒரு உணவகங்கத்தில்  அன்றாடம் சகஜமாக சாப்பிடும் ஒருவரிடம் சென்று இந்த உணவகத்தில் பயன்படுத்தப்படும் உனவு  பொருட்கள் தரமானவை தானா ?  என்ற ஒரு கேள்வியை முன் வைத்தோமேயானால் அதற்கு அவரிடம் இருந்து நமக்கு கிடைக்கும் பதிலும் ஒரு கேள்வியாக தான் இருக்க முடியும் .

பெருகி வரும் தொழிற் போட்டியால் குளிர் சாதன வசதி ,கண்ணாடி மேசைகள் ,சொகுசு நாற்காலிகள் என நம்மை ஈர்க்கும் உணவகங்களில் சமையல் நடைபெறும் இடத்தை மட்டும் யாரும் சென்று பார்த்திருக்க மாட்டோம்.இன்று பல உயர்தர உணவகங்களில் சமையல் நடைபெறும் இடத்தை சென்று பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது என்பது தான் உண்மை அப்படி அனுமதி மறுக்கப்படும்பொழுது என்னது நாம் பணம் கொடுத்து வாங்கி சாப்பிடும் உணவை எப்படி சமைக்கிறார்கள் என்று பார்க்க நமக்கே அனுமதியில்லையா? என்று இங்கு யாரும் இதுவரையில் கொதித்தெழுந்ததாக செய்தி கிடையாது.ஒரு சில இடங்களில் உணவகங்களுக்கு வழங்குவதற்கு என்றே இறைச்சி கடைகளில் காலாவதியான இறைச்சிகள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் செய்தி. இந்த காலவதியான இறைச்சி விற்பனைகள் குறித்து வேறொரு பதிவில் விரிவாக விவாதிப்போம் .இப்பொழுது இந்த உணவு பொருட்களின் பாதுகாப்பு குறித்த விஷயத்துக்கு வருவோம் இப்படி நாம் அன்றாடம் நம் வாழ்வில் உணவு பொருட்களுக்காக பயன்படுத்தும் ஹோட்டல்கள் ,மளிகை கடைகள் ,இறைச்சி கடைகள் ,பேக்கரிக்கள் ,பால் வியாபாரிகள் ,மொத்த விற்பனை நிலையங்கள்  ,சாலையோர கடைகள் ,உணவு பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் ,இரவு நேர உணவு விடுதிகள் போன்றவைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் அனைத்துமே தரமானது தானா ? அப்படி அவைகள் தரமற்ற மற்றும் காலாவதியான பொருட்கள் என்றால் யாருக்கு புகார் தெரிவிப்பது ?


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உணவு பொருட்களின் தரம் குறித்த புகாருக்கு  : 04365 247060

புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் உணவு பொருட்களின் தரம் குறித்த புகார்களுக்கு : 0413 2292277


தமிழ்நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையரால் அறிவிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண் : 94440 42322

இந்திய உணவு பாதுகாப்புத்துறை  ஆணையம் : 9868686868

காரைக்கால் மாவட்ட மக்கள் fcps-kkl.py@gov.in என்கின்ற இமெயில் முகவரியில் உணவாயு பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்கலாம்.


நாகப்பட்டினம் மாவட்ட மக்கள் : மாவட்ட நியமன அலுவலர் ,உணவு பாதுகாப்பு அலுவலகம் ,பழைய அவசர சிகிச்சை பிரிவு கட்டிடம் ,மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகம் ,நாகப்பட்டினம் .  என்ற முகவரியில் நேரில் சென்று தங்களுடைய புகார்களை வழங்கலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...