தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் கடற்கரை சாலையில் சிதிலமடைந்து காணப்படும் பாதுகாப்பற்ற தடுப்புச்சுவர்கள்

சமீப காலமாக மாலை நேரங்களில் காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.உள்ளூர் மக்கள் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்தும் மக்கள் கூட்டம் கூட்டமாக இங்கு வந்து குவிகின்றனர்.இதற்கு முக்கிய காரணம் ஆரவாரமற்ற அமைதியான சூழல் ,கடற்கரை காற்று வாங்கியபடி நடை பயணம் மேற்கொள்ள அகலமான நீண்ட நடைமேடைகள் ,அரசலாறு விழியே கடற்கரையை சென்றடையும்  காரைக்கால் கடற்கரையின் பிராதான சாலை இப்படி மற்ற நகரங்களில் உள்ள கடற்கரைகளில் இருந்து பல விஷயங்களில் மாறுபட்ட ஒரு அமைப்பை கொண்டிருப்பது தான் காரைக்கால் கடற்கரை.

காரைக்கால் கடற்கரை சாலை
நம் நாட்டில் உள்ள பல கடற்கரைகளில் இல்லாத வண்ணம் ஒரு ஆறு செல்லும் வழியே சேர்ந்து பயணித்து கடற்கரையை அடைவது போன்ற ஒரு சாலை அமைப்பு காரைக்காலில் தான் உள்ளது.2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் நாள் வங்கக்கடலில் கடலில் ஏற்பட்ட சுனாமியால் காரைக்கால் கடற்கரை சாலை மிகுந்த சேதத்துக்கு உள்ளானது.பின்னர் புதுச்சேரி அரசால்  கடற்கரையை விரைவாக புனரமைக்க நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்க்கொள்ளப்பட்டன அதன்படி நேரு வீதியில் இருந்து காரைக்கால் கடற்கரைக்கு செல்லும் பிராதான சாலையின்  வலது புறத்தில் நடைமேடை அமைக்கப்பட்டது.காரைக்கால் டாப்ளர் வானிலை ஆய்வு மைய குடியிருப்பு  அருகே சாலையின் வலது புறமாக இருக்கும் நடைமேடை முடிவடைந்து கடற்கரை சாலையின் இடது புறமாக மற்றொரு  நடைமேடை தொடங்குகிறது அது காரைக்கால் கடற்கரை சிறுவர் பூங்காவை சென்றடையும் படி அமைக்கப்பட்டுள்ளது.கடற்கரையை நோக்கி செல்லும்பொழுது அரசாலாறு காரைக்கால் கடற்கரை சாலையின் வலது புறத்தில் அமைந்துள்ளது.இப்படியான மாறுபட்ட அமைப்புகளை கொண்ட காரைக்கால் கடற்கரை சாலையின் பொழிவில்  வெளியூர் பயணிகள் கவரப்படுவது இயற்கை தான் ஆனால் சமீப காலமாக கடற்கரை சாலைக்கும் அரசலாறுக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்கள் மிகவும் சிதிலமடைந்து உடைந்து விழும் அளவில் காணப்படுகின்றன.சில இடங்களில் தடுப்பு சுவர்கள் இருந்ததற்கான அடையாளங்களே இல்லாமல் முற்றிலும் தரைமட்டமாகி விட்டது .இதனால் இரவு நேரத்தில் பயணம் செய்வோர் மிகுந்த அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் . குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனத்துக்கு வழி அளிக்க ஒதுங்குகையில் அவ்வாகனத்தின் ஒளியில் நிலை தடுமாறி சரியான தடுப்பு சுவர்கள் இல்லாத அரசலாறில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதனால் மாலை நேரத்தில் குடும்பத்துடன் இரு சக்கர வாகனங்களில் பயணிப்போர் மிகவும் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.அது மட்டுமல்லாமல் தற்பொழுது வெளியூர்களில் இருந்து நிறைய சுற்றுலாப் பயணிகள் காரைக்கால் கடற்கரையை நோக்கி வருகின்றனர் சாலையோர அரசலாறின் அழகை ரசிக்கும் அவர்களின் பார்வைக்கு இந்த சிதிலமடைந்த தடுப்பு சுவர் ஒரு வெள்ளை காகித கரும்புள்ளி போல் காட்சியளிக்கும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது.

திட்டத்திட்ட 2 கிலோ மீட்டர் தூரம் அமைத்திருக்கும் இந்த சாலையில் 1.5 கிலோமீட்டர் அளவு வரை தடுப்பு சுவர்கள் முற்றிலும் சிதலமடைந்த அழியும் தருவாயில் தான் உள்ளன.மேலும் படுகுகளை அதில் கட்டுவதால் சில இடங்களில் தடுப்பு சுவர் முற்றிலும் விழுந்து திறந்த வெளியாக காட்சியளிக்கிறது.இதைப்போன்ற விஷயங்கள் பார்வைக்கு மட்டுமல்ல பயணத்துக்கும் உகந்ததல்ல.இனி வரும் காலங்களில் இந்த சிதிலமடைந்த தடுப்பு சுவர்களால் பெரிய அளவிலான விபத்துக்கள் நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது.அப்படி ஒரு விபத்து நடந்தால் தான் இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா ? இல்லை வரும்  முன் காப்போம் என்ற மொழிக்கு ஏற்ப துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் உயிர் காக்குமா ? இதுவே காரைக்கால் கடற்கரை சாலையில் தினமும் பயணம் செய்யும் உள்ளூர் வாசிகளின் கேள்வியாக உள்ளது.

சிதலமடைந்த நிலையில் இருக்கும் காரைக்கால் கடற்கரை சாலை தடுப்பு சுவரின் ஒரு சில புகைப்படங்கள்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...