தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் இருந்து கும்பகோணம் ,திருத்துறைப்பூண்டி,நாகப்பட்டினம் பகுதிகளுக்கு கிடத்தப்படும் மதுபானங்கள்

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைலைகளில் உள்ள மதுக்கடைகளை மூடக்கோரி மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் மூடப்பட்டன.மூடப்பட்ட மதுக்கடைகளை வேறு இடங்களில் திறப்பதிலும் தொடர்ந்து பல சிக்கல்கள் நீடித்து வருகின்றன.இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை திறக்க பொதுமக்களின் எதிர்ப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மற்றொரு பக்கம் தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வருகிறது அதனால் எப்படி பணம் சம்பாரிப்பது என்று தெரியாமல் இளைஞர்கள் மன விரக்தியில் உள்ளனர்.அவர்களில் சிலர் எப்படியாவது பணம் பார்த்து விட வேண்டும் என்று முடிவெடுத்து தமிழகத்தில் தற்பொழுது நிலவும் மதுபான தட்டுப்பாட்டை பயன்படுத்தி பணம் ஈட்ட திட்டமிட்டு வருகின்றனர்.

பொதுவாக தமிழக பகுதிகளில் உள்ள மதுப்பிரியர்களுக்கு புதுச்சேரி மாநில மது வகைகளை கண்டாலே ஒரு பரவசம் தான்.அதற்கு காரணம் அதன் விலையும் தரமும் தான்.புதுச்சேரி மாநில மதுபானங்கள் தரமானவை என்று தமிழகத்தை சார்ந்த மதுபிரியர்கள் நம்புகின்றனர்.ஆனால் புதுச்சேரியிலும் போலி சரக்குகள் உண்டு என்பது வேறு விஷயம்.உச்ச நீதி மன்ற தீர்ப்புக்கு பிறகு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களிலும் பெருபாலான மதுக்கடைகள் மூடிய நிலையிலேயே உள்ளன .அப்படியானால் மது விற்பனை செய்யப்படுவது கிடையாதா ? என்று ஒரு கேள்வியை நீங்கள் முன்வைத்தால் அதற்கு பதிலும் ஒரு கேள்விக்குறியாக தான் இருக்க முடியும்.முன்பாவது அரசுக்கு காலால் வரி என்று ஒன்று கிடைத்தது இப்பொழுது அதுவும் கிடையாது.எத்தனை நாட்கள் பூட்டிய கடைகளில் மது பாட்டிலைகளை தேக்கி வைக்க முடியும் அவைகளுக்கும் காலாவதி நாள் என்று ஒன்று  உண்டு தானே அப்படி காலாவதி நாளை நெருங்கிவிட்ட மதுபான பாட்டில்களுக்கு தமிழகத்தில் சரியான கிராக்கியாம்.இங்கிருந்து குறைந்த விலைக்கு மது பானங்களை வாங்கி தமிழக பகுதிகளுக்கு எடுத்து சென்று விற்பனை செய்தால் கொள்ளை லாபம் ஈட்டி விடலாம் என்ற எண்ணத்தில் மது பானங்களை கிடத்தி சென்று விற்பனை செய்வோரின் எண்ணிக்கை முன்பை விட இப்பொழுது பல மடங்கு உயர்ந்து விட்டதாம்.இதைப்போன்ற காரியங்களில் இளைஞர்கள் தான் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனராம்.

செய்தி : 17-05-2017 நேற்று திருத்துரைப்பூண்டியில் திடீரென நடத்தப்பட்ட வாகன சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் இருந்து 100க்கும் மேற்பட்ட புதுவை மாநில மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டனவாம்.16-05-2017 நேற்றுக்கு முந்தைய நாள் கும்பகோணம் அருகே காரைக்கால் - கும்பகோணம் சாலையில் வந்த ஒரு சொகுசுக்காரில் 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்கள் பொட்டிகளுடன் இருந்தனவாம்.இதற்கு சில தினங்களுக்கு முன்பே காரைக்காலை சுற்றியுள்ள தமிழக பகுதிகளில் மது விற்பனையில் ஈடுபட்டுவந்த சிலர் கைது செய்யப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது என்பதும்  குறிப்பிடத்தக்கது.பொதுவாகவே இதைப்போன்ற நகரங்களில் நடத்தப்படும் இரு சக்கர வாகன சோதனைகளின் பொழுது அதிகபட்சமாக 10ல் ஒருவர் தான் சிக்குவர் அப்படியானால் பார்த்துக் கொள்ளுங்கள்.அதுமட்டுமல்லாமல் இந்த சோதனைகள் எல்லாம் தமிழகத்தில் மேற்கொள்ளப் பட்டவைகள்.காரைக்காலில் இருந்து நாகப்பட்டினம் ,கும்பகோணம் ,திருவாரூர் ,மயிலாடுதுறை ,சீர்காழி போன்ற அனைத்து பகுதிகளுக்கு செல்லும் சாலைகளிலும் புதுவை மாநில சோதனைச் சாவடிகள் உள்ளன  அதனை மீறி எப்படி மது பாட்டில்கள் தமிழக பகுதிகளுக்கு செல்கின்றன என்று தான் தெரியவில்லை.உங்களில் யாருக்கேனும் இதற்கான விடை தெரிந்திருந்தால் சொல்லுங்கள்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...