தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் கோடை விடுமுறை அறிவியல் முகாம் 24-05-2017 அன்று தொடங்குகிறது

புதுச்சேரி அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் சுற்றுசூழல் துறை சார்பில் காரைக்கால் தந்தை பெரியார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வருகின்ற 24-05-2017 முதல் 29-05-2017 வரை கோடை விடுமுறை அறிவியல் முகாம் நடைபெற உள்ளது காலை 9:00 மணி தொடங்கி மதியம் 1:00 மணி வரை நடைபெற உள்ள இந்த முகாமில் அறிவியல் மற்றும் சுற்றுசூழல் தொடர்பான பயனுள்ள நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.இந்த முகாமில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள 6 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தங்களது பெயர்களை தாங்கள் பயிலும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 22-05-2017 மற்றும் 23-05-2017 ஆகிய தேதிகளில் காலை 10:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை முகாம் அமைப்பாளரிடம் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த முகாமை காண வருவோருக்கு அனுமதி இலவசம் மேலும் விபரங்களை அறிய 9940918613 மற்றும் 9788106380 ஆகிய தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியரின் செய்தி  குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...