தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் 4 கடைகளில் இருந்து கார்பைடு கல் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் பறிமுதல்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள பழக்கடைகளில் கார்பைடு கல் என்று பொதுவாக மக்களால் அழைக்கப்படும் கால்சியம் கார்பைடு பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை  செய்யப்பட்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் நமது இணையத்தலத்தில் சில தினங்களுக்கு முன் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தோம்.கால்சியம் கார்பைடு பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வதினால் பொது மக்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் பற்றியும் அதில் தெளிவாக விளக்கி கூறியிருந்தோம்.அந்த பதிவை கான https://goo.gl/PmqVlu என்ற முகவரியை சொடுக்கவும்.


இந்நிலையில் 12-05-2017 இன்று கார்பைடு கல் என்கிற கால்சியம் கார்பைடு பயன்படுத்தி புதுச்சேரியில் மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் புதுச்சேரியில் உள்ள சில கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர் அப்பொழுது 4 கடைகளில் கால்சியம் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.இதனால் அதிகாரிகள் அந்த மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

புதுச்சேரி காரைக்காலில் மட்டுமல்லால் தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களிலும் இதைப்போன்ற கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.அந்த பழங்களை வாங்கி சாப்பிடுபவர்கள் அவர்களுக்கே தெரியாமல் உடல் ரீதியாக பல இன்னல்களை சந்திக்க வேண்டியதுள்ளது.

கால்சியம் கார்பைடில்   (CaC2) இருந்து வெளிப்படும் அசித்தலின் (Acetylene) வாயு நரம்பு மண்டலங்களை பாதிப்புக்கு உள்ளாக்கி அதன் மூலமாக மூளைக்கு செல்லும் பிரானவாயுவின் (Oxygen) அளவை குறைக்கிறது அதுவே தொடர்ந்து நடைபெறும் பட்சத்தில் ஹைபோக்சியாவுக்கு  (Cerebral hypoxia) வாய்ப்புள்ளது மேலும் கார்பைடு (carbide )ஆரம்பகாலத்தில் தலைவலி ,மயக்கம்,வாந்தி ,பேதி,வாய்ப்புண் போன்ற அறிகுறிகளை வழங்குகிறது அதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அதை உட்கொள்ளும் பொழுது ஞாபக மறதி ,நினைவுத்திறன் குறைதல் ,தூக்கமின்மை உள்ளிட்டவைகள் ஏற்படும்  வாய்ப்பும்  உள்ளது அதுவே தொடரும் பட்சத்தில் நாளடைவில் கேன்சருக்கு வழிவகுக்கிறது இந்த அனைத்தும் பிரச்சனைகளும் இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது ஏற்படுவது கிடையாது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...