தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் குப்பைகளை அகற்ற பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது

புதுவை மாநிலத்தின் புதுச்சேரி மாவட்டத்துக்கு உட்பட்ட உழவர்கரை நகராட்சியில் திடக் கழிவுகளை அகற்ற மக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த 15-05-2017 அன்று உழவர்க்கரை நகராட்சி ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது அதன்படி வீடுகள் மற்றும் குடியிருப்புகள் அல்லாத வளாகங்களில் இருந்து குப்பைகளை அகற்ற பொதுமக்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்பட் உள்ளது என அதில்  தெரிவிக்கப்பட்டு இருந்தது மேலும் இது குறித்து பொதுமக்கள் தங்கள்  கருத்துக்களை தெரிவிக்க 30 நாட்கள் அவகாசமும் அதில் வழங்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் புதுச்சேரி நகராட்சியும் கூடிய விரைவில் இத்திட்டத்திர்கான வரைவு அறிக்கையை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

மத்திய அரசு வெளியிட்டு இருந்த தூய்மையான நகரங்கள் பட்டியலில் புதுச்சேரிக்கு 189 வது இடமே கிடைத்தது அதேபோல உழவர்கரை நகராட்சிக்கு 206வது இடம் கிடைத்தது.மிக சிறிய நகரத்தை ஏன் தூய்மையாக வைத்துக் கொள்ள முடியவில்லை என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வந்தனர்.இந்நிலையில் அடுத்த ஆண்டு அக்டொபர் மாதத்தில்  மத்திய அரசு வெளியிட உள்ள முழு தூய்மையான மாநிலம் என்ற இலக்காகி அடைவதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நகராட்சி ஆணையத்துக்கு ,திடக்கழிவுகளை அகற்றும் பணிக்கு மனித உழைப்பு தேவைப்படுகிறது அதற்காக திடக்கழிவுகளை அகற்றும் பணிக்கு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளோம் என நகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...