தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வரின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்

கடந்த ஆண்டு புதுச்சேரியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியவுடன் யார் புதுச்சேரியின் அடுத்த முதல்வர் ?  என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்தது அதன்பின்  அப்பொழுது சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத முன்னால் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரி முதல்வராக அறிவிக்கப்பட்டார்.இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றால் மட்டுமே புதுச்சேரி முதல்வராக தொடர முடியும் என்ற நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் முதல்வர் நாராயணசாமி பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

10-05-2017 இன்று புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் புதுச்சேரி சபாநாயகர் திரு வைத்தியலிங்கம் அவர்களால் முதல்வர் நாராயணசாமியின் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...