தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

'ரான்சம்வர்'(Ransomware) என்றால் என்ன ? 'ரான்சம்வர்'(Ransomware) சைபர் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது ?

தற்பொழுது உலக நாடுகள் முழுவதிலும் ரான்சம்வர் சைபர் தாக்குதல் சைபர் குற்றவாளிகளால் நடத்தப் பட்டு வருகிறது.இதனால் தொலைத்தொடர்பு ,மருத்துவம் ,போக்குவரத்து போன்ற பல துறைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சமாளிக்க முடியாமல் பல நாடுகள் திணறி வருகின்றன.இந்தியாவிலும்  பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரான்சம்வர் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.


'ரான்சம்வர்'(Ransomware) என்றால் என்ன ?
மால்வேர் ,ட்ரோஜன்,ஸ்பைவேர் ,வார்ம்ஸ் போன்று ரான்சம்வர் எனப்படும் இதுவும் கணினிக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய ஒரு மென்பொருள் தான்.இதைப்போன்று கணினியின் செயல் திறனுக்கு தீங்கு விளைவிக்கூடிய மென்பொருட்களை தான் வைரஸ் என்கிறோம்.ஒவ்வொரு வகையான வைரசுக்கும் ஒவ்வொரு தனிப் பண்பு உண்டு அந்த வரிசையில் இந்த ரான்சம்வர் என்பது நம் கணினியில் உள்ள தகவல்களை நாமே அணுக முடியாதபடியோ அல்லது பயன்படுத்த முடியாதபடியோ தடை செய்கிறது அப்பொழுது ஒரு செய்தியையும் அது தெரிவிக்கிறது அது என்ன வென்றால் குறிப்பிட்ட அளவு பணம் கேட்கிறது.நீங்கள் அந்த அளவு பணத்தை கொடுத்தால் உங்களது கணினியில் உள்ள தகவல்களை திரும்ப பெறலாம் அல்லது களவுபோகாமல் பார்த்துக்கொள்ளலாம் என்கிறது.சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கணினியில் உள்ள தகவல்களை எல்லாம் சிறைபிடித்து வைத்துக்கொண்டு நீங்கள் குறிப்பிட்ட பணத்தை வழங்கினால் விடுவித்து விடுவோம் என்பது போன்ற மிரட்டல் தான் அது.

அவர்கள் கேட்கும் பணத்தை எப்படி வழங்குவது ?அப்படி நாம் வழங்கும் பணம் யார் வங்கி கணக்குக்கு செல்லும் ?
அவர்கள் உங்களிடம் இருந்து பணத்தை பெற பிட்காயின் (Bitcoin ) என்கிற திறந்த மூல மென்பொருளை பயன்படுத்துகிறார்கள் பிட்காயின்களை தனிப்பட்ட கணிணிகளிலோ அல்லது மூன்றாம் தரப்பு வலைத்தளங்களிலோ சேமிக்க முடியும். எப்படியாக இருந்தாலும் பிட்காயின் முகவரி உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இணையம் மூலம் பணத்தை அனுப்பலாம். எந்த அரசாங்கமும் பிட்காயினின் மதிப்பை மாற்ற முடியாது. அதிக பிட்காயின்களை உருவாக்கி யாரும் பணவீக்கத்தையும் உருவாக்க முடியாது.இதனால் யாருக்கு பணம் செல்கிறது என்று கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.


'ரான்சம்வர்'(Ransomware) சைபர் தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது ?
'ரான்சம்வர்'(Ransomware) சைபர் தாக்குதலில் 60% சதவிகித தாக்குதல்கள் இமெயில் மூலமாக தான் நடத்தப்படுகிறது.அதனால் யாரிடம் இருந்து வந்திருக்கிறது என்று தெரியாத இமெயிலை திறக்காமல் இருப்பது நல்லது.மேலும் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது உங்களுக்கு பணம் கிடைத்திருக்கிறது என்று ஆசையை தூண்டும் வண்ணம் ஏதாவது இமெயில் வந்திருந்தாள் அதை திறக்க முற்படாதீர்கள்.தேவையில்லாத மென்பொருட்களை தரவிறக்கம் செய்வது பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளலாம்.அதைபோல தேவையில்லாமல் கண்ட கண்ட இணையதளங்களுக்கு செல்வத்தையும் தவிர்த்துவிடுங்கள்.முடிந்த வரை சில நாட்களுக்கு இணையம் மூலம் வங்கி கணக்குகளில்  இருந்து பணப்பரிவர்த்தனையில்  ஈடுபடாமல் இருப்பது நல்லது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...