தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-06-2017 வங்கக்கடலில் உருவானது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

இதற்கு முந்தைய பதிவில் 08-06-2017 அல்லது 09-06-2017 ஆகிய தேதிகளில் வாங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக குறியிருந்தோம்.09-06-2017 இன்று வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.இது தற்பொழுது விஷாகபட்டினத்துக்கும் மியன்மாருக்கும் இடையே நிலைகொண்டுள்ளது.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கையில் இது வட மேற்கு திசையில் நகர்ந்து மேற்குவங்கம் அல்லது வங்கதேசம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதனால் மத்தியப்பிரதேஷம் ,தெலுங்கானா ,வட ஆந்திரா ,ஒரிசா ,மேற்கு வங்கம் ,வங்கதேசம் ,அஸ்ஸாம் உள்ளிட்ட மாநிலங்களில் மழையின்  அளவு அதிகரிக்கும்.அதே சமயம் தமிழகத்தில் உள் மற்றும் வட கடலோர மாவட்டங்களிலும் ,தெற்கு ஆந்திராவிலும் மழையின் அளவு குறையும்.

தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர பகுதிகளில் இருக்கும் மழை மேகங்கள் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் வட கிழக்கு திசையில் இழுக்கப்படுவதால் இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மற்றும் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவவே வாய்ப்புள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...