தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-06-2017 இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

11-06-2017 கேரளாவில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் குறைய தொடங்கியுள்ளது இனி வரக்கூடிய வாரத்தில் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் மழையின் அளவு குறைய ஆரம்பிக்கும் .அதே சமயம் வரக்கூடிய வாரத்தில் கர்நாடகா ,கோவா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களின் கடலோர மாவட்டங்களில் மழையின் அளவு அதிகரிக்கும்.

 நான் இதற்கு முன்பே பதிவிட்டிருந்தது போல வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையானது இன்று அல்லது நாளை வங்கதேசத்திலோ அல்லது மேற்கு வங்கத்திலோ முழுமையாக கரையை கடந்தாலும் வட கிழக்கு திசையில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் அந்தமானுக்கு அருகே இருக்கும் மழை மேகங்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியின் வட கடலோர மாவட்டங்களுக்கு பயணிக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு அதே சமயம் நான் மேலே குறிப்பிட்டது போல கேரளவிலும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் குறைய தொடங்கிவிட்டது இனி வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் வெப்ப சலனம் காரணமாக ஏற்படும் மழையை தான் முழுமையாக நம்பி இருக்க வேண்டும்.






பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...