தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருத்துரைப்பூண்டியில் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரால் தொடங்கிவைக்கப்பட்ட "நெல் திருவிழா " கொண்டாடப்பட உள்ளது

வருகின்ற 17-06-2017 மற்றும் 18-06-2017 ஆகிய தேதிகளில் திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் உள்ள ஏ.ஆர்.வி. தனலட்சுமி திருமண  அரங்கத்தில்  "நமது நெல்லை காப்போம் " மற்றும் கிரியேட் அமைப்பு சார்பில் நெல் திருவிழா மற்றும் உணவுத் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.கடந்த 2006 ஆம் ஆண்டு வேளாண் விஞ்ஞானி கோ.நாம்மாழ்வர் அவர்களால் இந்த நெல் திருவிழா தொடங்கிவைக்கப் பட்டது என்பது குறிப்பிடத்தக்குது.2006 ஆம் ஆண்டு முதல் தற்பொழுது வரை தொடர்ந்து பதினோரு ஆண்டுகளாக இந்த நெல் திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த திருவிழாவில் பாரம்பரிய நெல் சாகுபடியில் மருத்துவ மகத்துவம் ,இயற்கை வேளாண்மையின் அவசியம் , விளை நிலங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்வள ஆதாரப் பாதுகாப்பு ,விவசாயிகளுக்கான நபார்டு வங்கி திட்டங்கள் ,பருவநிலை மாற்றமும் விவசாயிகள் எதிர்கொள்ளும் சவால்களும் ,விற்பனை வாய்ப்பும் சந்தை நிலவரங்களும் ஆகிய தலைப்புகளில் வல்லுநர்கள் கருத்துரையாற்ற உள்ளனர்.

மேலும் இவ்விழாவில் சிறந்த விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களுக்கு நம்மாழ்வார் விருதும் ,ஆறாயிரம் விவசாயிகளுக்கு 156 வகையான பாரம்பரிய நெல் விதைகளும் வழங்கப்பட உள்ளன.ஜூன் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ள இத்திருவிழாவில் பங்கேற்க விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்.

தொலைபேசி எண்கள் : 04369 - 220954
அலைபேசி எண்கள் : 9842607609 , 9751001176


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...