தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

24-05-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

கடந்த வாரத்தைப் போல இந்த வாரத்திலும் வட ஆந்திரம் மற்றும் ஒரிசாவில் கன மழைக்கு அதிக வாய்ப்புகள் உள்ளது மேற்கு வங்கம் அருகே வங்கக்கடலில் அடுத்தடுத்து மேலடுக்கு சுழற்சிகள் உருவாகி வட ஆந்திரம் ,ஒரிசா மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்பை அதிகரிக்கும் அதே போல அரபிக்கடலை ஒட்டியுள்ள கர்நாடகம் மற்றும் மஹாராஸ்திர கடலோர பகுதிகளில் நல்ல மழைக்கு வாய்ப்புண்டு கேரள  மாநிலத்திலும் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழைக்கு வாய்ப்புண்டு.

சரி தம்பி மற்றக்கதை நமக்கு எதுக்கு நேரத்தை வீணாக்காம்ம தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரக்கூடிய வாரத்தில் வானிலை எப்படி இருக்கும் அதை  சொல்லு ? அப்படினு நீங்க கேட்க நினைப்பதை என்னால் உணர முடிகிறது,அதற்கான பதில் போன முறை கூறிய அதே பதில்தான் வரக்கூடிய வாரத்தில் தமிழகம் முழுமையாக வெப்ப சலனம்  காரணமாக உருவாகும் மழையை தான் நம்பியிருக்க வேண்டும்.தற்பொழுது நிலவும் சூழ்நிலைகளைக் கொண்டு பார்க்கும்பொழுது வெப்ப சலனத்தினால் தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு பிராகாசமாக உள்ளது.

காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களை பொறுத்தவரையில் 24-06-2017 ஆகிய 28-06-2017 தேதிகளில் மழைக்கான வாய்ப்பு பிராகசமாக உள்ளது.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...