தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரியில் ஐரோப்பிய திரைப்பட விழா 2017

புதுச்சேரி பிரஞ்சு தூதரகத்தில் உள்ள கலாச்சார வளாகத்தில் ஐரோப்பிய யூனியன் திரைப்பட விழா 15-07-2017 (ஜூலை 15) ஆம் தேதி தொடங்கி 03-08-2017 (ஆகஸ்ட் 3) ஆம் தேதிவரை நடைபெற உள்ளது என புதுச்சேரி அலையன்ஸ் பிரான்ஸ்சே இயக்குனர் ஒலிவியே லித்வின் தெரிவித்துள்ளார்.

2017 ஜூலை 15 முதல் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி வரை புதுச்சேரியில் நடைபெற உள்ள இந்த திரைப்பட விழாவில் 22 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 22 சிறந்த திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.வெனிஸ் மற்றும் டோராண்டோ திரைப்பட விழாக்களில் பங்கு பெட்ரா 3 இதயங்கள் என்ற பிரஞ்சு மொழி திரைப்படம் துவக்க விழா அன்று திரையிடப்பட உள்ளது.

புதுச்சேரியில் முதல்முறையாக நடத்தப்பட இருக்கும் இந்த திரைப்பட விழாவை டில்லியில் உள்ள ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழு சென்னையில் உள்ள இந்திய திரைப்பட திறனாய்வு கழகம் மற்றும் புதுச்சேரியை பிரஞ்சு கலாச்சார மையம் ,நவதர்சன் திரைப்பட சங்கம் உள்ளிட்டவை இணைந்து நடத்த உள்ளன.



பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...