தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நாகப்பட்டினம் வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்

வடக்கு பொய்கைநல்லூர் இதை சுருக்கமாக பொய்யூர் என்றும் சிலர் வழங்குவர்.நாகை மாவட்டத்தில்   நாகப்பட்டினம் நகரில் இருந்து அக்கரைப்பேட்டை வழியாக வேளாங்கண்ணி செல்லும் வழியில் திட்டத்திட்ட 5 கி.மீ தொலைவில் வடக்கு பொய்கைநல்லூர் அமைந்துள்ளது. வெளியூர்களில் இருந்து பயணிப்பவர்கள் நாகப்பட்டினம் புறவழிச்சாலை வழியாக வேளாங்கண்ணிக்கு பயணிக்கும் வழியில் உள்ள பறவை என்னும் ஊரில் இருந்து திட்டத்திட்ட 3 கி.மீ தூரம் பயணம் செய்து இந்த ஊரை அடையலாம்.வடக்கு பொய்கைநல்லூர் (பொய்யூர் ) என்றவுடன் நம் நினைவுக்கு வருவது நந்திநாதேஸ்வரர் திருக்கோயிலும் அதற்கு அருகேயுள்ள கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடமும் தான்.சித்தர்கள் பலர் இந்த கோயிலுக்கு வந்து முக்தி பெற்றதால் இத்தலம் 'சித்தாச்சிரம் ' எனவும்  போற்றப்படுகிறது.

கோரக்க சித்தர் இவர் இந்தியாவின் வட மாநிலங்களிலும் ,நேபாளத்திலும், தமிழகத்திலும் மிகப் பிரபலமானவராக திகழ்கிறார்.சீனாவிலும் இவர் குறித்து  சில வரலாற்று சான்றுகள் உண்டு.இவர் இந்தியாவின் வட மாநிலத்தில் பிறந்தவராக அறியப்படுகிறார்.தமிழகத்தின் சதுரகிரி வரை பயணம் மேற்கொண்டு போகரின் நட்பை பெற்றதாகவும் பட்டினத்தார் காலத்துக்கு பிறகும் இவர் வாழ்ந்ததாகவும் ஒரு சில வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.பதினென் சித்தர்களில் இவர் பதினாறாவது சித்தராக உள்ளார்.வட நாட்டில் 'நவநாத சித்தர் ' என்ற சித்தர் தொகுதியின் தலைமை சித்தராக இவரை போற்றி வருகின்றனர்.உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோராக்பூர் என்ற நகரின் பெயருக்கும் இவருடைய புகழுக்கும் தொடர்பு இருந்தமைக்கு அங்கிருக்கும் கோரக்கநாதர் கோயிலே சான்று.நேபாளத்தில் கோரக்கா நகருக்கு பெயர் வரக் காரணம் கோரக்கரே என கூறப்படுகிறது. இன்றளவும் தமிழகத்தில் நேபாளிகளை கூர்க்கா என்று தான் வழங்கி வருகின்றோம்.சித்த மருத்துவம் ,யோகம் ,போர்க்கலை ,சித்தரியல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய கோரக்கரின் புகழ் இந்தியா முழுக்க பரவி கிடக்கின்றது.


காரைக்காலில் இருந்து கோரக்க சித்தர் கோயிலுக்கு செல்லும் வழி

காரைக்கால் -------->நாகூர் -------->நாகப்பட்டினம் -------->அக்கரைப்பேட்டை -------->கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் (வடக்கு பொய்கைநல்லூர் )

மாற்று வழி : 

காரைக்காலிலிருந்து வேளாங்கன்னி செல்லும் சாலை வழியாக எப்படி கோரக்கர் சித்தர் ஜீவ சமாதி உள்ள இடத்தை அடைவது

                                                 புறவழிச்சாலை
காரைக்கால்  ------------------------------------> பறவை -------->கருவேலன்கடை -------->வடக்கு பொய்கைநல்லூர் -------->கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம்.

சென்னையிலிருந்து கோரக்க சித்தர் ஜீவசமாதிக்கு எவ்வழியாக பயணிப்பது ? 

சென்னை -------->புதுச்சேரி -------->கடலூர் -------->சிதம்பரம் -------->சீர்காழி -------->காரைக்கால் -------->நாகப்பட்டினம் -------->அக்கரைப்பேட்டை -------->கோரக்க சித்தர் ஜீவசமாதி பீடம் (வடக்கு பொய்கைநல்லூர் )












பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...