தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

முதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கும் பதில்கள் - சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்தார் ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் மற்றும் ஆளுநர் இடையே நடைபெறும் அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகின்றனர்.இது உண்மை என்பது போலவே சமீபத்தில் தந்தி டிவிக்கு வழங்கிய பெட்டியில் முதல்வர் நாராயணசாமி ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகள் குறித்து சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக தொடர்ந்து அவர் மத்திய அமைச்சர்களையும் குடியரசு தலைவரையும் அடுத்தடுத்து சந்தித்து வருகிறார்.இந்நிலையில் கிரண்பேடி மத்திய அரசிடம் இருந்து முதல்வர் நாராயணசாமியின் கடிதங்களுக்கு அனுப்பப்பட்டு இருக்கும் பதில்கள் அடங்கிய கோப்பை தனது முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.அந்த கடிதத்தின் இறுதியில் 03-02-2017 ,06-02-2017,07-02-2017,08-02-2017 மற்றும் 19-02-2017 ஆகிய தேதிகளில் புதுச்சேரி முதல்வர் அனுப்பிய கடிதங்களுக்கான பதில் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மத்திய அரசின் அந்த கடிதத்தில் இடம்பெற்று இருக்கும் சில முக்கிய பகுதிகளை கிரண்பேடி கோடிட்டு காட்டி சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்துள்ளார்.அதன்படி எந்த ஒரு விவகாரம் தொடர்பான கோப்புகளாக இருந்தாலும் அதனை கேட்கவோ ,நிராகரிக்கவோ அல்லது சரிபார்க்கவோ ஆளுநருக்கு முழு அதிகாரம் உண்டு எனவும்.அவசர காலங்களில் மாநில அமைச்சர்களின் ஆலோசனை இல்லாமலேயே ஆளுநர் முடிவு எடுக்கலாம் எனவும் அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.ஆக மொத்தத்தில் புதுச்சேரியில் எந்த ஒரு திட்டத்தையும் அனுமதிக்கவோ அல்லது முடக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இருக்கிறது என்பது போன்ற ஒரு தகவலை மத்திய அரசு வழங்கியுள்ளது.மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட தங்களை செயல்பட விடாமல் மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரால் தடுக்க முடியும் என்றால் அது எப்படி ஜனநாயகமாக இருக்க முடியும் என்று மாநில அரசு சார்பில் தொடர்ந்து கேள்விகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

1 comments:

  1. வணக்கம் நண்பரே
    உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
    வாழ்த்துக்கள்
    discount coupons

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...