தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

கிரண்பேடி Vs நாராயணசாமி : பிரதமர் மோடியுடன் கிரண்பேடி சந்திப்பு - புதுச்சேரியில் உச்சகட்டத்தை எட்டியிருக்கும் அதிகார மோதல்

கடந்த 10-06-2017 அன்று தந்தி தொலைக்காட்சியில் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டேவின் கேள்விகளுக்கு பதிலளித்த புதுவை மாநில முதல்வர் திரு நாராயணசாமி "புதுச்சேரி மாநிலத்தில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவர்கள் வீதிகளை மீறி செயல்படுவதாகவும்.சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்கு சென்று திடீர் ஆய்வுகள் மேற்கொள்ள அவருக்கு அதிகாரம் இல்லை "  என்றும்  தெரிவித்திருந்தார்.இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தனது முகநூல் பக்கத்தில் "புதுச்சேரி அரசின் செய்லபாடுகளுக்கு முதல்வரே தடையாக உள்ளார் " என்று பதிவிட்டிருந்தார் .புதுச்சேரியில் முதல்வர் துணை நிலை ஆளுநர் என இருவருமே ஒருவருடைய செயல்பாட்டை மற்றொருவர் நேரடியாகவே விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.சில தினங்களுக்கு முன் முதல்வர் நாராயணசாமி டில்லி சென்று கிரண்பேடியின் செயல்பாடுகள் குறித்து மத்திய அமைச்சர்களிடமும் உள்துறை செயலாளர்களிடமும் புகார் தெரிவித்து திரும்பினார் இந்நிலையில் தற்பொழுது துணை நிலை ஆளுநர் கிரண்பேடி பிரதமர் மோடியை சந்தித்து வருகிறார்.தற்பொழுது புதுச்சேரியில் முதல்வருக்கும் ஆளுநருக்கும் இடையே நடைபெற்று வரும் இந்த அதிகார மோதலால் புதுச்சேரி மக்கள் மத்தியில் ஒரு விதமான பரபரப்பு நிலவி வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது .இணையத்தை பொறுத்தவரை மக்களிலேயே இரு பிரிவுகளாக சிலர் கிரண்பேடிக்கு ஆதரவாகவும்  சிலர் நாராயணசாமிக்கு  ஆதரவாகவும்  சமூக ஊடகங்களில் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.கிரண்பேடியை போன்று பிரணாப் முகர்ஜியும் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டால் என்ன ஆகும் ?ஒரு மாநிலத்தின் ஆளுநர் மக்களை சந்திப்பதில் தவறு என்ன இருக்கிறது ? என்று ஒவ்வொருவரும் ஒவொரு விதமாக தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...