தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிளாஸ்டிக் அரிசி உண்மையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறதா ? பிளாஸ்டிக் அரிசியை கண்டறிவது எப்படி ?

சில தினங்களுக்கு முன் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பிளாஸ்ட்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வந்த நிலையில் ,பிளாஸ்டிக் அரிசியால் செய்யப்பட்ட சாதத்தை பிசைந்து உருட்டி ஒரு பந்தை போன்று செய்து அதனை வைத்து கல்லூரி மாணவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடுவது போன்றதொரு காணொளி இணையத்தில் பரவி பார்ப்பவர்களை அதிர்ச்சிக் குள்ளாக்கி வருகிறது.அதனையடுத்து ஏபிஎன் என்ற தொலைக்காட்சியில் அந்த காணொளி குறித்த செய்தியும் விவாதமும் நடத்தப்பட்டது தமிழக ஊடகங்களில்  ஏனோ இந்த விஷயத்தை ஒரு செய்தியாக கூட வெளியிட வில்லை .சரி அதெல்லாம் போகட்டும் இன்று நடந்த புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் புதுச்சேரி மாநிலத்தில் பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டைகள் விற்பனை செய்யப்படுகிறது அதனை கட்டுப்படுத்த அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது ? என்பது போன்ற ஒரு  கேள்வி எதிர்கட்சிகளால் முன் வைக்கப்பட்டது அதற்கு பதிலளித்த அமைச்சர் கந்தசாமி புதுச்சேரியில் உணவு பொருட்களில் கலப்படம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் .

ஒரு மாநிலத்தின் சட்டப்பேரவை கூட்டத்தில் இதைப்போன்ற ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டு அது தவறு என்று ஆளும் அரசால் நிரூபிக்க முடியவில்லை என்றால் அதை சாதாரணமான ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ள முடியாது.இந்த பிளாஸ்டிக் அரிசிகள் சீனாவில் தயாரிக்கப்பட்டு இந்தியா ,இந்தோனேசியா ,இலங்கை ,பாகிஸ்தான் ,வங்கதேசம் போன்ற நாடுகளில் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக கூறப்படுகிறது.அரசாங்கம் எந்த வித ஆதாரங்களும் இன்றி இதைப்போன்ற ஒரு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது என்பது மிகவும் கடினம். அப்படியானால் இதை தடுக்க வழியே இல்லையா ? என்று கேட்டால் முடிந்த வரை நாம் வாங்கும் அரிசியை ஒரு சில சோதனைகள் செய்து பார்த்து நல்லவை என்று உறுதியான பிறகு பயன்படுத்துவதே சிறந்தது என்ற பதிலை தான் கூறமுடியும்.

பிளாஸ்டிக் அரிசையை வீட்டிலேயே எளிய முறையில் கண்டறிவது எப்படி ?

பிளாஸ்டிக் அரிசியை கண்டறிவதற்கான எளிய வழிமுறைகள்  : 

  • ஒரு டம்ளரிலோ அல்லது பாத்திரத்திலோ முக்கால் வாசி அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள் அதில் அரிசியை போடுங்கள் லேசாக கிளறி விடுங்கள் பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் அது நீரின் மேற் பகுதியில் மிதக்க வாய்ப்புகள் உள்ளது ஏனெனில் பிளாஸ்டிக் நீரில் மிதக்கக்கூடிய பண்பை உடையவை  நல்ல அரிசிகள் நீரின் அடியில் தங்கிவிடும்.
  • தீக்குச்சிகளை  கொளுத்தியோ அல்லது லைட்டரின் உதவியுடனோ அரிசியை எரிக்கும் பொழுது அது பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் பிளாஸ்டிக் தீயில் உருகி பிளாஸ்டிக்கின் வாசனை வரும் அவ்வாறு பிளாஸ்டிக் வாசனைவந்தால் அது ஒருவேளை பிளாஸ்டிக் அரிசியாக இருக்கலாம்.
  • 200° C அளவு சட்டியில் கொதிக்கும் எண்ணையில் சிறிதளவு அடுத்து அரிசியின் மீது போட்டால் அது பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் சட்டியின் அடிப்பகுதியிலேயே ஒட்டிக்கொள்ளும் அல்லது வெப்பத்தில் உருகும்.
  • வேக வைத்த அரிசியை ஒரு பாட்டிலில் அடைத்து 2-3 நாட்கள் அப்படியே வைத்து விடுங்கள்.அது ஒருவேளை பிளாஸ்டிக் அரிசியாக இருந்தால் எந்தவித பூஞ்சை காளான் தொற்றும் அந்த பாட்டிலில் இருக்காது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...