தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி மக்களின் நலன் சார்ந்தே எனது செயல்பாடு உள்ளது - ஆளுநர் கிரண்பேடி : அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை கிரண்பேடி இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும் - முதல்வர் நாராயணசாமி

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்ற பொழுது அரசுக்கு வழங்க வேண்டிய இடங்களை தனியார் கல்லூரிகளுக்கு வழங்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாக சில தினங்களுக்கு முன் புதுவை மாநில துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.அடுத்த நாளே மருத்துவ மாணவர் சேர்க்கையின் பொழுது ஆளுநர் கிரண்பேடி மேற்கொண்ட ஆய்வின் காணொளிக்காட்சிகள் அடங்கிய பதிவு ஒன்றை தமிழில் பிரபலமான தினசரி நாளிதழ் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது .தற்பொழுது அந்த காணொளிக்காட்சி வாட்ஸ் ஆப் ,டிவிட்டர் ,முகநூல் என மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் அணைத்து ஊடகங்களிலும் தீயென பகிரப்பட்டு வருகிறது.இந்நிலையில் இது தொடர்பாக நேற்று புதுவை மாநில அமைச்சர்களில் ஒருவரான மல்லாடி கிருஷ்ணராவ் சமூக வலைத்தளங்களில் ஆளுநர் கிரண்பேடியால் பதிவிடப்பட்டு வரும் தகவல்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.தற்பொழுது இந்த முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கப் பட்டு வருகிறது அப்பொழுது பேசிய புதுவை மாநில முதல்வர் நாராயணசாமி ,ஆட்சிக்கு களங்கம் உண்டாக்கும் வகையில் ஆளுநர் கிரண்பேடி சமூக வலைத்தளங்களில் ஆளுநர் கிரண்பேடி விமர்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.மேலும் மருத்துவ கவுன்சிலிங் விதிமுறைகளுக்கும்,மத்திய சுகாதாரத்துறை உத்தரவுகளுக்கும் உட்பட்டு மாணவ மாணவிகளை தேர்ந்தெடுத்தும் கூட கிரண்பேடி அவர்கள் விவரம் தெரியாமல் அரசு ஒதுக்கீட்டை தனியார் மருத்துவக் கல்லூரிக்கு கொடுத்துவிட்டோம் என பொய்யான குற்றச்சாட்டை எங்கள் அரசு மீது சுமத்தி களங்கம் விளைவிக்க முயல்கிறார் என்றும் இனி அரசு நிர்வாகத்தில் தலையிடுவதை கிரண்பேடி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.

இது குறித்து பதிலளித்துள்ள கிரண்பேடி தனது வேலையை மட்டுமே நான் மேற்கொண்டு வருகிறேன் சமூக வலைத்தளங்களில் யாரையும் தனிப்பட்ட முறையில் நான் விமர்க்கிக்க விலை என்றும் கூறியுள்ளார் மேலும் புதுச்சேரி மக்களின் நலன் சார்ந்தே தனது  செயற்பாடுகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...