தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

ஆளுநர் ,முதல்வர் ,தலைமை செயலர் என அனைவரும் டில்லிக்கு விரைந்தனர் - ஸ்தம்பித்த புதுச்சேரி அரசு நிர்வாகம்

புதுச்சேரியில் மருத்துவ பட்டடிப்பிற்கான மாணவர் சேர்ப்பு விவகாரத்தில் செண்டாக் முறைகேடுகள் தொடர்பான ஆளுநரின் குற்றச்சாட்டுகளை அடுத்து தற்பொழுது புதுச்சேரியில் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது இந்நிலையில் ஆளுநர் கிரண்பேடி மற்றும் முதல்வர் நாராயணசாமி ஆகிய இருவரும் இது தொடர்பாக டில்லியில் முகாமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.தலைமை செயலர் அதிகாரிகளை தவறாக வழி நடத்துவதாக ஆளுநர் கிரண்பேடி சில தினங்களுக்கு முன்பு குற்றம் சாட்டியிருந்தார் ஆனால் சமீபத்தில் தலைமை செயலருக்கு மத்திய உள் துறையால் பதவி உயர்வு வழங்கப்பட்டது இந்நிலையில் புதுச்சேரியில் ஆளுநர் மற்றும் முதல்வருக்கு இடையேயான மோதல் போக்கு தொடர்வதால் தலைமை செயலர் தரப்பில் பணியிட மாற்றம் கேட்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது இதனால் புதுச்சேரி தலைமை செயலர் மத்திய அரசின் உயர் பணிக்கு எந்நேரத்திலும் மாற்றப்படலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன மேலும் புதுச்சேரியின் புதிய தலைமை செயலராக ஒரு பெண் அதிகாரி நியமிக்கப் படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.

புதுச்சேரியில் சிபிஐ விசாரணை நடந்து வரும் நிலையில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அனைவரும் டில்லியில் முகாமிட்டுள்ளது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...