தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பொலிவுறு நகரங்களின் (Smart City ) திட்டப் பட்டியலில் புதுச்சேரியம் தேர்வாகியுள்ளது - முதல்வர் நாராயணசாமி தகவல்

23-06-2017இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுவை முதல்வர் நாராயணசாமி மத்திய அரசு தற்பொழுது பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் புதுவையை செய்து உள்ளது எனவும் இதற்கான பட்டியலில் புதுவை 8 வது இடத்தில் உள்ளது எனவும் கூறியுள்ளார்.மேலும் இது தொடர்பாக அவரை பேசுகையில் முதல்கட்டமாக சேதாரப்பட்டு பகுதியில் பொலிவுறு நகரம் அமைக்க கடந்த என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் கோப்புகள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன ஆனால் முதல் சுற்றில் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் அதற்கு ஒப்புதல் தரவில்லை இரண்டாவது சுற்றுக்கு ஒப்புதலுக்காக அனுப்பியும் மத்திய அரசு அதனை நிராகரித்தது.பின்னர் தற்போதைய காங்கிரஸ் - திமுக கூட்டணி ஆட்சியில் புதுச்சேரியை பொலிவுறு நகரங்கள் பட்டியலில் இடம்பெற செய்வது தொடர்பாக விவாதங்கள் நடத்தப்பட்டு சேதாரப்பட்டு பகுதி இதற்கு பொருத்தமாக இருக்காது என முடிவு செய்யப்பட்டது பின்னர் பாரம்பரியமாக பிரஞ்சு கட்டிடக்கலைகளைக் கொண்ட புதுச்சேரி நகரம் மற்றும் அதனுடன் உருளையன்பேட்டை ,முத்தியால்பேட்டை ,உப்பளம் ராஜ்பவன் மற்றும் நெல்லித்தோப்பில் தலா ஒரு பகுதியென இணைத்து வல்லுனர்களுடன் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு கோப்புகள் தயார் செய்யப்பட்டன  பிறகு அந்த வரைவு திட்டத்தை தில்லி சென்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவிடம் கொடுத்தோம் தற்பொழுது மத்திய அரசு பொலிவுறு நகரங்கள் திட்டத்தில் புதுச்சேரியை தேர்வு செய்துள்ளது என கூறினார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...