தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் கடற்கரையில் அரியவகை மயில் மீன் (Sail Fish) - ஆர்வமுடன் புகைப்படம் எடுத்துச் சென்ற சுற்றுலா பயணிகள்

12-06-2017 நேற்று மாலை காரைக்கால் கடற்கரை சாலையின் ஒரு ஐஸ் கட்டி பெட்டியின் மீது வைக்கபப்ட்டு இருந்த அறிய வகை மயில் மீன் அவ்வழியாக நடைப்பயிற்சியில் ஈடுபட்டு வந்த பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்த்தது.திட்டத்திட்ட 3 முதல் 4 அடி நீளம் வரை இருந்த இந்த மயில் மீன்களை ஆங்கிலத்தில் Sailfish என்று அழைப்பார்கள் .மிக நீளமான மூக்கினை உடைய இந்த மயில் மீன்கள் பார்ப்பதற்கு ஒரு பறவை இனம்போலவே காட்சி தருகின்றன.ஒன்பது அடி நீளம் வரை வளரக்கூடிய இந்த மயில் மீன்கள் உலகெங்கிலும் உள்ள கடற்கரைகளில் சற்று வெதுவெதுப்பான பகுதிகளில் காணப்படுகின்றன.இந்தியாவை பொறுத்தவரையில் தூத்துக்குடி கடல் பகுதியில் மிக அரிதான ஏழு முதல் ஒன்பது  அடி நீளமுடைய சாம்பல் நிற மயில் மீன்கள் அவ்வப்பொழுது பிடிபடுகின்றன.

இந்த மீன்களின் முதுகுப்புறம் விரிந்த மயில்தோகை போன்ற அமைப்பு உள்ளது அதனாலேயே இதை மயில் மீன் எனவும் மயில் தொகை மீன் எனவும் தமிழகத்தில் அழைக்கின்றனர்.பார்ப்பதற்கு மிக அழகாகவும் வித்தியாசமாகவும் காட்சியளிக்கும் இந்த மீனின் இறைச்சி மிகவும் சுவையாக இருக்குமாம் அதனால் இதன் விளையும் மிக மிக அதிகமாம்.நேற்று மாலை காரைக்கால் கடற்கரை சாலையில்  நடைப்பயிற்சி செய்வோரும் கடற்கரைக்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகளும் இதனை கூடி நின்று வேடிக்கை பார்த்தது மட்டுமின்றி தங்களின் கைப்பேசியில் புகைப்படமும் எடுத்துச் சென்றனர்.

இதோ அந்த மயில் மீனின் புகைப்படங்கள் உங்களுக்காக.

காரைக்கால் கடற்கரை சாலை - மயில் மீன் (Sail Fish )


மயில் மீனின் முதுகுப்பகுதியில் இருக்கும் மயில் தொகை போன்ற பரப்பு 

Sail Fish (மயில் மீன் )
மயில் மீண்களின் நீளமான மூக்கு பகுதி
மயில் மீனின் முதுகுப் பகுதி

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...