தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சீனாவில் தயாரிக்கப்படும் ரப்பர் இறால் மீன்கள் - சமூக ஊடகங்களில் வேகமாக பரவிவரும் காணொளி

உலகில் எந்த ஒரு விலை உயர்ந்த பொருளாக இருந்தாலும் அதைப்போன்றதொரு  நகலை  (Duplicate) உருவாக்குவதில் சீனர்களுக்கு தான் முதலிடம் என்றே சொல்லலாம்.ஆரம்ப காலகட்டத்தில் விலை மலிவு என்பதால் உலகின் பல்வேறு வளர்ச்சியடையாத மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் மக்கள் மத்தியில் சீனப் பொருட்களுக்கு வரவேற்பு அதிகரித்து இருந்தது குறிப்பாக இந்தியா போன்ற வளர்ச்சி அடைந்து வரும் நாடுகளில் சீன கைபேசிகள் மற்றும் மென் பொருட்களுக்கு சில நாட்கள் வரையில் அதிக வரவேற்பு இருந்து வந்தது.இப்படி உலகின் விலையுயர்ந்தவற்றின் நகல்களாக சீனாவில் தயாரிக்கப்பட்ட மென்பொருட்கள்  (software ) மற்றும் வன்பொருட்களுக்கு (Hardware ) நாம் வழங்கி வந்த ஆதரவே அவர்களை இன்று  உணவு பொருட்களுக்கு  நகல்களை உருவாக்கும் அளவுக்கு வளர்த்து விட்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

பிளாஸ்டிக் அரிசி ,பிளாஸ்டிக் முட்டை ,பிளாஸ்டிக் மிளகாய் ,பிளாஸ்டிக் மட்டன் மற்றும் பிளாஸ்டிக் கோசிக்கீரை என சீனாவில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களின் வரிசையை பட்டியலிட்டால் அது நீண்டு கொண்டே போகும்.இந்நிலையில் சமீபத்தில் சமூக ஊடகங்களில் சீனாவில் தயாரிக்கப்படும் ரப்பர் இறால் மீன்கள் தொடர்பான கானோளிக் காட்சி ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி பார்ப்பவர்களை பதறவைத்து வருகிறது.தயாரிப்பு அறைக்குள் போலீசார் நுழைந்து அந்த ரப்பர் இறால்களை பரிசோதனை செய்வது போன்று அந்த காணொளியின் காட்சி அமைந்துள்ளது.இதைப்போன்ற பொருட்களை சாப்பிடும் பொழுது ஆண்மை குறைவு ஏற்பட்டு மலட்டுத்தன்மை உருவாக வாய்ப்புள்ளது எனவும் மேலும் இதை சாப்பிடும் பெண்களுக்கும் கருப்பை பலவீனம் முதலிய பாதிப்புகள் உருவாகவும் வாய்ப்பு உள்ளதாகவும்  ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது.மக்கள் தொகையை கட்டுக்குள் வைக்க இதைப்போன்ற விஷயங்கள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் ஏன் மக்கள் தொகையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் மர்மங்கள் நிறைந்த பல சர்ச்சைகள்  ஏற்படுத்திய டான் பிரவுன் (Dan Brown ) என்ற எழுத்தாளரை நீங்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் அவருடைய படைப்பான 'Inferno ' என்ற புத்தகத்தில்  ஒரு முக்கிய கதாபாத்திரம்  ' பெருகி வரும் மக்கள் தொகையால் இன்னும் சில நாட்களில் உலகம் முழுவதுமாக அழிந்துவிடும் அதற்கு முன்பாக மக்களை கூட்டம் கூட்டமாக கொன்று மீதிம் இருப்போரின் மூலம் இந்த பூமியை வாழவைக்கலாம் ' என்ற கருத்தை  உடையதாக கூறப்பட்டு இருக்கும் அதைப்போன்ற சிந்தனை உடையவர்கள் தான் இப்படி செய்கிறார்களோ என்னவோ அது மட்டுமல்லாமல் இந்த பூமியை கட்டுக்குள் வைத்திருப்பதாக தமிழகத்தில் ஹீலர் பாஸ்கர் போன்றோரால் வெளிப்படையாக எடுத்துரைக்கப்பட்ட இல்லுமினாட்டிகள் (illumunati) கூட மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் வைக்க இப்படி செய்திருக்கலாமோ என்னவோ இவைகள் எல்லாம் வெறும் அனுமானங்கள் தான் எது எப்படியோ இந்தியாவை பொறுத்தவரையில் இதைப்போன்ற சீன ரப்பர் இறால்கள் புழக்கத்தில் இருப்பதாக இதுவரை சாட்சியங்களுடன் நிரூபிக்கப் படவில்லை அது வரை மகிழ்ச்சியாக இருப்போம் ஆனால் எதுவாயினும் இந்த செய்திகளை எல்லாம் பார்க்கும் பொழுது இயற்கையான காய்கறிகளை நாமே அறுவடை செய்து உணவாக உண்பதே  நல்லது என்று தோன்றுகிறது.

இதோ சமூக ஊடகங்களை தற்பொழுது வைரலாகி வரும் அந்த காணொளியை இங்கே இணைக்கிறேன்

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...