தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் தொழில் உரிமம் பெற 28-06-2017 மற்றும் 29-06-2017 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்

28-06-2017 (ஜூன் 28) மற்றும் 29-06-2017 (ஜூன் 29) ஆகிய தேதிகளில் காரைக்காலில் சுய தோழி செய்து வருவோர் தங்களது தொழிலுக்கான உரிமத்தை நகராட்சியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் ஏற்கனவே உரிமம் பெற்றிருப்போர் அதனை சுலபாமாக புதிப்பித்துக் கொள்ளவும் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.காரைக்கால் கோவில்பத்தில் அமைந்துள்ள சேம்பேர் ஆப் காமெர்ஸ் கட்டிடத்தில் இந்த சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

சிறப்பு முகாம் நடைபெறவிருக்கும் தேதி : 28-06-2017 (புதன் கிழமை ) மற்றும் 29-06-2017 (வியாழக்கிழமை )

இடம்  : சேம்பேர் ஆப் காமெர்ஸ் கட்டிடம் ,கோவில்பத்து ,காரைக்கால் (நீல்கிரிஸ் சூப்பர் மார்க்கெட் அருகில் )

காரைக்காலில் இதுவரையில் தொழில் உரிமம் பெறாதவர்கள் சிறப்பு முகாமில் விண்ணப்பிக்க கட்டாயம் எடுத்து வர வேண்டிய விஷயங்கள்.

  • புகைப்படங்கள்  - 2
  • ஆதார் அட்டையின்  நகல் 
  • வாக்காளர் அடையாள அட்டையின் நகல் 
  • தொழில் உரிமம் தேவைப்படும் இடத்தின் சொத்து வரி 
  • இடத்தின் வாடகை ஒப்பந்த நகல் 
ஆகியவற்றுடன் விண்ணப்ப படிவம் மற்றும் ₹1 மதிப்புள்ள கோர்ட் ஸ்டாம்ப்புடன் வழங்க வேண்டும்

உரிமம் ஏற்கனவே பெற்றிருப்பவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிமத் தொகையை செலுத்தினால் உடனடியாக உரிமம் புதிப்பித்து தரப்படும்.

இவ்வாய்ப்பினை காரைக்காலை சார்ந்த புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழிலதிபர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.வரக்கூடிய நாட்களில் உரிய தொழில் உரிமம் பெறாமல் தொழில் நிறுவனங்களை  சீல் வைக்கப்பட்டு அதனை நடத்தி வருபவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கபடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...