தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு இருசக்கர வாகனத்தில் கடத்தப்படும் மதுபாட்டில்கள் - திருக்கடையூர் அருகே பிடிபட்ட 432 மது பாட்டில்கள்

காரைக்கால் மாவட்டத்துக்கு மிக அருகே உள்ள தமிழக பகுதியான பொறையார் நகர காவல்துறை ஆய்வாளர் தலைமையில் நேற்று திருக்கடையூர் அருகே உள்ள பூந்தாழை தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்பொழுது காரைக்காலில் இருந்து வேகமாக சீர்காழி நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றை நிறுத்தி அந்த வாகனத்தை ஓட்டிவந்த இளைஞரிடம் இருந்த இரண்டு பைகளை சோதனை செய்ததில்,அதில் 432 புதுச்சேரி மாநில மது பாட்டில்களும் 10 லிட்டர் சாராயமும் இருந்தது தெரியவந்தது.பின்னர் அந்த வாகனத்தை ஓட்டிவந்த தமிழக பகுதியான சங்கரன்பந்தலை சேர்ந்த அந்த 30 வயது இளைஞரிடம் (அந்த இளைஞரின் வருங்காலம் கருதி அவரின் பெயரும் முகவரியும் குறிப்பிடவில்லை ) நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில் இந்த மது பாட்டில்கள் அனைத்தும் காரைக்காலில் இருந்து சீர்காழிக்கு கிடத்தப்பட்டது தெரியவந்தது.இதனையடுத்து அந்த இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சமீபகாலமாக காரைக்காலை அடுத்துள்ள தமிழக பகுதிகளில் இதைப்போன்று கடத்திக் கொண்டு செல்லப்படும் மதுபானங்கள் பிடிபட்டது என்ற செய்தி வெளியாவது வாடிக்கையாகி விட்டது.பிடிபட்டதே இவ்வளவு என்றால் அப்பொழுது கடத்தப்பட்டது எவ்வளவு என்ற கேள்வி மக்களின் மனதில் எழுந்துள்ளது.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...