தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபானக் கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமார் தலைமையில் காரைக்கால் மாவட்டத்தில் புதிய மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் பெரிய அளவிலான ஊழல் நடந்திருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தில்லைஸ் சூப்பர் மார்க்கெட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் 27-06-2017 (நேற்று) அன்று நடத்தப்பட்டது,இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பிரதிநிதிகள் ,உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 19-06-2017 அன்று கலால் துறை ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் ,சம்பத்தப்பட்ட துறை அமைச்சர் ,செயலர் மற்றும் ஊழல் ஒழிப்பு அதிகாரியிடம் புகார் வழங்கப்பட்டும் அது  தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கபடாததை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.புதிய உரிமம் பெறாமல் காலாவதியான உரிமத்தை வைத்துக்கொண்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் வகையில் முறைகேடுகள் புரிந்து வருபவர்களின் உரிமங்களை அரசு ரத்து செய்ய வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகமும் ,அரசும் இதனை உடனே சரி செய்யாத பட்சத்தில் துணை ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் இல்லையேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் எனவும் இந்திய ஊழல் இயக்கத் தலைவர் டாக்டர் ஆனந்தகுமார் தெரிவித்திருக்கிறார்.
பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...