தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

நெடுங்காடு கொம்யூன் குளக்குடி,ஆண்டூர் ,உசுப்பூர் பகுதியில் நண்டலாற்றில் மணல் எடுக்க தடை - காரைக்கால் மாவட்டத்தில் தொடர்ந்து வந்த மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி - காரை மாவட்ட சார்பு ஆட்சியர் அதிரடி

காரைக்கால் மாவட்டத்தை சார்ந்த நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்து எல்லைக்கு உட்பட்ட குளக்குடி,ஆண்டூர் ,உசுப்பூர் ஆகிய கிராமங்களை ஒட்டியுள்ள நண்டலாறு ஆற்றுப் படுகைகளில் மணல் எடுக்கவும் செங்கல் சூளைகள் அமைக்கவும் 144 தடை உத்தரவு காரைக்கால் மாவட்ட சார்பு ஆட்சியர் திரு.கேசவன் ஐ.ஏ.எஸ் அவர்களால் பிறப்பிக்கப்பட்டுள்ளது அந்த பகுதிகளில்.காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆற்றுப்படுகைகள் மற்றும் கரைகளை சேதப்படுத்தி சிலர் மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் நெடுங்காடு கொம்யூன் ஆண்டூர் அனுமதியின்றி ஒரு செங்கல் சூலை செயல்பட்டு வருவதாகவும் அதற்காக நண்டலாற்றின் ஒரு பகுதியில் குளக்குடி , அண்டூர், உசுப்பூர் கிராமங்களை ஒட்டி விதிகளை மீறி வண்டல்மண் அள்ளப்பட்டு வருவதாகவும் அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் வருவாய் அதிகாரிகளிடம் புகாரளித்தனர்.

அதன் பிறகு ஆட்சியர் கேசவன், தாசில்தார்கள் முத்து, பொய்யாதமூர்த்தி ஆகியோர் அந்த இடத்துக்கு விரைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.ஆய்வின் முடிவில் அந்த பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மணல் கொள்ளை நடத்தப்பட்டு வந்ததும் விதிகளுக்கு புறம்பாக ஒரு செங்கல் சூலை அங்கே இயங்கி வந்ததும் தெரியவந்தது.இதைத் தொடர்ந்து குளக்குடி, அண்டூர், மற்றும் உசுப்பூர் ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பித்து சார்பு ஆட்சியர் கேசவன் உத்தரவிட்டார்

அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது "மக்களின் உயிருக்கும், உடைமைக்கும், பயிர்களுக்கும் ஏற்படும் ஆபத்தைத் தடுக்கும் பொருட்டும் பொன்பேத்தி, குரும்பகரம் வருவாய் கிராமங்களுக்கு உட்பட்ட நண்டலாற்றின் தென்கரையில் உள்ள உசுப்பூர், குளக்குடி,அண்டூர் கிராமங்களிலும், வடகரையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான இடத்திலும் யாரும் அத்து மீறி நுழையக் கூடாது. எந்தக் காரணத்துக்காகவும் மணல் அள்ளக்கூடாது. மோட்டார் மற்றும் மோட்டார் அல்லாத வாகனங்களில் மண்ணை அள்ளிச் செல்லக் கூடாது. என அறிவிப்பதுடன் இரண்டு மாத காலத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது மேலும் இந்த தடை உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் " என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுங்காடு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமின்றி காரைக்கால் மாவட்டம் முழுவதிலும்  இதைப்போன்ற முன் அனுமதி பெறாத ,சட்ட விரோதமான ,விதி முறைகளை மீறிய மணல் கொள்ளைகள் ஆங்காங்கே தொடர்ந்து நடைபெற்று கொண்டு தான் இருக்கின்றன.இப்பொழுது சார்பு ஆட்சியரால் பிறப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த தடை உத்தரவு ஆனது மணல் கொள்ளைக்கு எதிராக மாவட்ட ஆட்சியரங்கம் இனி எடுக்கவிருக்கும் நடவடிக்கைகளுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என நம்பலாம்.

பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...