தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

புதுச்சேரி எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆளுநர் மாளிகை கண்காணிக்கும் - துணைநிலை ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரியில் சில தினங்களுக்கு முன் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தபொழுது திடீர் ஆய்வு மேற்கொண்ட புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கலந்தாய்வு சரியான முறையில் நடத்தப்பட வில்லை என்றும் அரசு ஒதிக்கீடு செய்த 71 இடங்களை தனியாருக்கு தாரைவார்க்க சிலர் முயற்சித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.பின்னர் அந்த 71 இடங்களுக்கு மீண்டும் கலந்தாய்வு நடத்த அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.கிரண்பேடியின் அந்த திடீர் ஆய்வின் பொழுது அரங்கேறிய விஷயங்கள் யாவும் தினசரி நாளிதழ் ஒன்றால் கானோளிக் காட்சியாக பதிவு செய்யப்பட்டது.பின்னர் அந்த காணொளி சமூக ஊடகங்கள் வாயிலாக மக்களை சென்றடைந்தது.ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து ,அனைவருக்கும் இலவச அரிசி வழங்குவதற்கான கோப்பில் கையெழுத்திட தாமதம் செய்தது போன்ற விஷயங்களில் ஆளுநர் மீது அதிருப்தியில் இருந்த மக்கள் அனைவரும் இந்த கானோளி இணையத்தில் வெளியானதற்கு பிறகு கிரண்பேடிக்கு ஆதரவு கரம் நீட்ட ஆரம்பித்து உள்ளனர்.திடீர் என ஆளுநருக்கு பொது மக்களிடம் பெருகிய ஆதரவால் சிலர் சினம் கொண்டு இருப்பதாகவும் செய்தி.சரி விஷயத்துக்கு வருவோம் முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அதிரடி காட்டிய கிரண்பேடியின் பார்வை தற்பொழுது இளநிலை மருத்துவ சேர்க்கை பக்கம் திரும்பியிருக்கிறது.ஆம் , புதுச்சேரி எம்.பி.பி.எஸ் மருத்துவ மாணவர் சேர்க்கையை ஆளுநர் மாளிகை கண்காணிக்கும் எனவும் நிலையான குழப்ப மில்லாத எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான கலந்தாய்வு நடைபெற வேண்டும் எனவும் கூறியுள்ளார் மேலும் முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான கலாந்தாய்வு குறித்து புகார்கள் வந்ததால் தான் அதில் தலையிட நேர்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...