தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் என்னிடத்தில் இல்லை - தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தன்னிடத்தில் இல்லை என தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சற்று முன்பு ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.சென்னை நந்தனத்தில் தமிழக அரசு உதவியுடன் இயங்கும் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ரசகுல்லாவை அறிமுகப்படுத்தும் விழாவில் கலந்துக்கொண்ட அமைச்சர் இவ்வாறு  தெரிவித்துள்ளார்.இந்த நிகழ்வினை பார்க்கும் பொழுது தன் கீழ் இயங்கும் ஒரு துறை சார்ந்த நிறுவனத்தின் பொருட்களில் கலப்படம் இருக்கிறது நிரூபிக்கப்பட்டும் நடவடிக்கை எடுக்க தமக்கு அதிகாரம் இல்லை என்று ஒரு அமைச்சர் கூறுகிறார் என்றால் அப்பொழுது யாருக்கு தான் அதிகாரம் உள்ளது ? என்ற கேள்வியை முன்வைக்க தோன்றுகிறது.மேலும் அவர் தொடர்ந்து பேசுகையில் ஆவின் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் பொருட்களில் பரிசோதனை செய்து பார்த்ததில் அவற்றில் கலப்படம் இல்லை என தெரிவித்தார்.

சில நாட்களுக்கு முன் பாலுடன் சோப்பு நுரை கலந்து விற்பனை  செய்யப்படுகிறது என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்ததும் அதனையடுத்து நடத்தப்பட்ட சோதனைகளில் அவை உண்மை என்பது போன்று ஆய்வு முடிவுகள் வெளியானதும் குறிப்பிடத்தக்கது இப்படி தமிழகத்தில் பாலில் கலப்படம் செய்யப்பட்டு விரப்பணி செய்யப்பட்டு வருவது உறுதியாகியுள்ள நிலையில் புதுச்சேரி மாநிலத்திலும்  பொதுமக்களிடம் விற்பனை செய்யப்பட்டு வரும் பாலின் தரம் குறித்து சோதனைகள் மேற்கொள்ள புதுச்சேரி அரசோ அல்லது ஆளுநரோ உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்பதே புதுவை மாநில மக்களின் கோரிக்கையாக உள்ளது.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...