திருவாரூர் அருகே ஆணைதென்பாதி என்கிற கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளாக தனியார் வசம் இருந்த பொது குளம் மாவட்ட நிர்வாகத்தின் உதவியுடன் மீட்கப்பட்டது .திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே உள்ளது ஆணைதென்பாதி என்கின்ற இந்த கிராமம் திருவாரூரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 40 ஆண்டுகளாக ஊர் மக்களுக்கு சொந்தமான பொது குளத்தை தனியார் ஒருவர் ஆக்கிரமித்து தன் வசம் வைத்து இருந்தார் இந்நிலையில் இது தொடர்பாக சில தினங்களுக்கு முன் ஊர் மக்கள் சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது அதனையடுத்து மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையால் சுமார் 40 ஆண்டுகளாக தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த அந்த குளம் மீட்கப்பட்டது இதையடுத்து ஆணைதென்பாதி பொதுமக்கள் அந்த குளத்தை தூர்வாரும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக