தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

சிக்கியது பூனையா ? சிறுத்தையா ? - விக்ரமசிங்கபுரம் அருகே பூனையை பிடிக்க மயக்க ஊசிகளுடன் விரைந்த வனத்துறையினர்.

திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்கப்புரத்தில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்தை ஒன்று இரண்டு குட்டிகளுடன் பிடிபட்டதாக கூறப்படுகிறது இந்நிலையில் விக்ரமசிங்கப்புரம் வனப்பகுதிக்கு அருகே பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பாபநாசம் வனத்துறையினருக்கு புகார் வந்தது அதனையடுத்து சிறுத்தையை பிடிக்க மயக்க ஊசி மருத்துவர் என அனைத்து முன் ஏற்பாடுகளுடன் வனத்துறையினர் விக்ரமசிங்கபுரத்துக்கு படையெடுத்துள்ளனர்.மிக மிக எச்சரிக்கையாக சிறுத்தை பதுங்கியிருப்பதாக கூறப்படும் பாறையை வனத்துறையினர் சுற்றி வளைக்க பாறையில் இருந்து வெளிவந்தது என்னவோ ஒரு காட்டுப் பூனைதானாம் அது சிறுத்தை இல்லையாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறுத்தை இந்த பகுதியில் பிடிபட்டதால் காட்டுப்பூனையை பார்த்து சிறுத்தை என கருதி பொதுமக்கள் தவறாக வனத்துறையினருக்கு புகார் அளித்து விட்டனராம்.

பூனையை பார்த்து சிறுத்தை என பயந்தவரின் பயத்தை கூட ஏற்றுக்கொள்ளலாம் திடீரென வணப்பகுதியில் சிறுத்தை போன்ற உடலமைப்புடன் இருக்கும் ஒரு உருவத்தை பார்க்கும் பொழுது நாம் கூட தவறாக அது சிறுத்தை தான் என்று முடிவு செய்யக்கூடும் ஆனால் இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிலர் சிறுத்தையை ரத்தத்துடன் பார்த்ததாகவும் அது ஆடுகளை இழுத்து சென்றதாகவும் பொய்யான வதந்திகளை கிளப்பி விட்டனராம் அதனால் தான் வனத்துறையினர் அதிரடியாக இந்த வேட்டையை மேற்கொள்ள வேண்டியதாகிவிட்டதாம்.வ்ந்து எப்படியோ இந்த விஷயம் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் கண்ணால் காண்பதும் பொய் ! காதால் கேட்பதும் பொய் !.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...