தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

01-07-2017 அடுத்து வரக்கூடிய வாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வானிலை எப்படி இருக்கும் ?

2017 ஜூலை மாதத்தில் வரக்கூடிய முதல் வாரத்தில் வெப்ப சலனம் காரணமாக தமிழக வட கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புண்டு கடந்த இரண்டு நாட்களாக மாலை நேரங்களில் சென்னை ,புதுச்சேரி ,கடலூர் ,நாகப்பட்டினம் ,காரைக்கால் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது ஆனால் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவு மழை வட சென்னை பகுதிகளை  தவிர வேறு எங்கும் பதிவாகவில்லை அதற்கு முக்கிய காரணம் கடந்த சில நாட்களாக மழை மேகங்கள் கடலோர நகரங்களை ஒட்டிய கடல் பகுதிகளில் உருவாகி வருகின்றன காற்றின் வேகம் வட கிழக்கு திசையில் அதிகமாக இருப்பதால் மழை மேகங்கள் வட கிழக்கு திசை நோக்கி நகர தொடங்கி விடுகின்றன வரும் வாரத்தில் அப்படியல்லாமல் கடலோர மாவட்டங்களின்  உள் பகுதிகளிலேயே மழை மேகங்கள் உருவாகும் என நம்பலாம்.கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சில நாட்களாக வட கடலோர மாவட்டங்களில் பகல் நேர வெப்பநிலையானது  அதிகரித்து வருகிறது இதே வெப்பநிலையே வரக்கூடிய வாரத்திலும் தொடரலாம்.

தென்மேற்கு பருவமழை காரணமாக 2017 ஜூலை முதல் வாரத்தில் கேரள எல்லையை ஒட்டியுள்ள நீலகிரி ,கோவை ,தேனி ,திருநெல்வேலி மற்றும் நாகர்கோயில் மாவட்டங்களில் அவ்வப்பொழுது மழைக்கு வாய்ப்பு உண்டு மேலும் வரக்கூடிய வாரத்திலேயே தென்மேற்கு பருவமழையானது கேரளாவில் பலவீனமடைய தொடங்கலாம்.

2017 ஜூலை முதல் வாரத்தில் வெப்ப சலனம் காரணமாக புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அவ்வப்பொழுது நல்ல மழைக்கு வாய்ப்புண்டு.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...