தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாங்கனி திருவிழா 2017 - ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பர வீதியுலா இனிதே தொடங்கியது - வெளியூர்களில் இருந்து காரைக்காலுக்கு படையெடுக்கும் மக்கள் கூட்டம்

08-07-2017 (சனிக்கிழமை ) காரைக்கால் மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீ பிச்சாண்டவர் பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் காட்சியைக் காண வெளியூர்களில் இருந்து மக்கள் காரைக்காலில் குவிந்த வண்ணம் உள்ளனர்.சிவபெருமான் பிச்சாண்டவர் வேடமிட்டு பவழக்கால் சப்பரத்தில் வீதியுலா செல்லும் பொழுது சப்பரத்திற்கு பின் வரும் பக்தர்களை நோக்கி ,வீடுகள் மற்றும் வணிக நிறுவங்களின் மேல் தளத்தில் இருந்து தங்களின் வேண்டுதல் நிறைவேற பொதுமக்கள் மாங்கனிகளை இறைப்பது வழக்கம் இவ்வாறு வீசப்படும் மாங்கனிகளை சாலையில் நிறைந்திருக்கும் பக்தர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது கைகளாலும் வலை கூடைகளாலாலும் பிடித்து செல்வர்.

தற்பொழுது பிச்சாண்டவர் வீசுதியுலா தொடங்கி இனிதே நடைபெற்று வரும் நிலையில் காரைக்கால் அருகே யுள்ள கும்பகோணம் ,திருக்கடையூர் போன்ற பகுதிகளில் இருந்து மாம்பழங்கள் லாரிகளில் எடுத்து வரப்பட்டு தரையில் குவித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.நேரம் அதிகரிக்க அதிகரிக்க மாங்கனிகளின் விளையும் உயர்ந்துக் கொண்டே இருக்கிறது.

பிச்சாண்டவர் வீதியுலாவை காண வரும் பக்த்தர்களின் பசி தீர்க்க அங்கங்கே தன்னார்வலர்கள் பக்த்தர்களுக்கு உணவு பொட்டலங்களை வழங்கி வருகின்றனர்.







பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...