தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

காரைக்கால் மாங்கனி திருவிழா : 08-07-2017 (நாளை ) சனிக்கிழமை காலை 6:00 மணிக்கு சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சிகான ஏற்பாடுகள் மும்மரம்

சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்தே காரைக்கால் நகரில் ஒவ்வொரு ஆண்டும் மாங்கனித் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது நிகழும் 2017ஆம் ஆண்டுக்கான மாங்கனித் திருவிழா நிகழ்ச்சிகள் கடந்த  05-07-2017 (புதன்கிழமை ) அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து  நடைபெற்று வருகிறது விழாவின் முக்கிய நிகழ்வான,உலகெங்கிலும் இருந்து பல்லாயிரம் பக்தர்கள் ஒன்று கூடும் சிவபெருமான் பிச்சாண்டவர் கோலத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சியானது 08-07-2017 (நாளை ) சனிக்கிழமை அன்று காலை 6:00 மணிக்கு காரைக்காலில் நடைபெற உள்ளது இந்த நிகழ்வின் பொழுது பக்தர்கள் தங்கள் இல்லங்களில் இருக்கும் மேற்க்கூரைகளில் இருந்து பல மூட்டை மாங்கனிகளை ஒவ்வொன்றாக வீசுவர் இளைஞர்கள் அவற்றை கீழ் இருந்து பிடித்து மகிழ்ந்து இறைவனின் அருள் பெறுவர் இந்த நிகழ்வின் பொழுது காரைக்கால் நகரப்பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் குவியக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது அதனால் பாதுகாப்பு பணியில் 300 காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமல்லாமல் போக்குவரத்துக்கு நெரிசல்கள் ஏற்படாத வண்ணம் தவிர்ப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது அதேபோல காரைக்காலில் மாங்கனிகளின் விற்பனை சூடு பிடித்துள்ளது திடீரென தொடர்ந்து அதிகரித்து வந்த இந்த மாங்கனிகளின் விற்பனையால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் காரைக்கால் மாங்கனித் திருவிழாவை முன்னிட்டு காரைக்கால் நகரின் முக்கிய சாலையான பாரதியார் சாலையில் பந்தல்கள் அமைக்கும் பணிகளும் திட்ட திட்ட நிறைவடைந்து விட்டன மொத்தத்தில் காரைக்கால் நகரில் நாளை நடக்கவிருக்கும் பிச்சாண்டவர் வீதியுலாவுக்கான பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகின்றன.


பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...