தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

09-07-2017 அன்று சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது

வருகின்ற 09-07-2017 (ஜூலை 9) ஆம் தேதி அன்று நாகை மாவட்டம் சீர்காழியில் பாரம்பரிய நெல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது.இந்த நெல் திருவிழாவில் இயற்கை விவசாயம் ,இடுபொருட்கள் ,பாரம்பரிய விதைகள் ,ஆரோக்கிய உணவுகள் குறித்த கருதரங்கமும் கண்காட்சியும் நடைபெற உள்ளது.

09-07-2017 அன்று சீர்காழியில் நடைபெற இருக்கும் இந்த பாரம்பரிய நெல் திருவிழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் ,திரைப்பட இயக்குனர் ஜனநாதன் ,காவிரி பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் ,அறிவியல் நகரம் துணைத்தலைவர் உ.சகாயம் ,நாகை மாவட்ட வேளாண் இணை இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.சீர்காழியில் விளந்திடசமுத்திரம் கடைக்கண் விநாயகநல்லூர் திருமண மண்டபத்தில் நடைபெற இருக்கும் இவ்விழாவில் 500 விவசாயிகளுக்கு தலா 2 கிலோ பாரம்பரிய நெல் விதைகள் வழங்கப்படும் இதை பெரும் விவசாயிகள் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நெல் திருவிழாவில் 4 கிலோ நெல் விதைகளாக திருப்பி வழங்க வேண்டும் மேலும் இந்த நெல் திருவிழாவில் சிறந்த இயற்கை விவசாயிகள் மூன்று பேருக்கும் நம்மாழ்வார் விருது வழங்கி சிறப்பிக்கப்பட உள்ளது.




பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...