தகவல்களை மின்-அஞ்சலில் பெற !
karaikal ammaiyaar Karaikal lady of angel church karaikal kailasanathaar veethi ula karaikal mosque Title of image Title of image

11-07-2017 (செவ்வாய்க்கிழமை ) நாளை காரைக்காலில் முழு கடை அடைப்பு போராட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் 3 நியமன எம்.எல்.ஏ க்களின் நியமனம் தொடர்பாக துணை நிலை ஆளுநர் கிரண்பேடியின் நடவடிக்கைகளை கண்டித்து கடந்த 08-07-2017 அன்று புதுவை மாநிலத்தில்  ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பாக புதுச்சேரி மற்றும் கரைக்களில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது அதிமுக ,திமுக மற்றும் நியமன எம்.எல்.ஏ க்கள்  விவகாரத்தில் ஆளுநரின் போக்குக்கு எதிரான கருத்துக்களை உடைய இதர கட்சிகள் மற்றும் இயக்கங்களின்  சார்பில் இந்த முழு கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது இதனையடுத்து 08-07-2017(சனிக்கிழமை ) அன்று புதுச்சேரியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன பேருந்துகள் முற்றிலுமாக இயங்கவில்லை ஆனால் காரைக்காலில் மாங்கனி திருவிழா நடைபெற்றதால் இந்த முழு கடையடைப்பு 11-07-2017 அன்று ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

08-07-2017 அன்று புதுச்சேரி பேருந்து நிலையம்

இந்நிலையில் புதுவை முதல்வர் நாராயணசாமி காரைக்கால் திமுக தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு ஏ.எம்.எச்.நாஜிம் அவர்களை சந்தித்து காரைக்காலில் முழு கடையடைப்பு நடத்துவது குறித்து ஆலோசனை செய்தார் அதிமுக கட்சியும் இந்த கடையடைப்புக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் ஏற்கனவே திட்டமிட்டபடி வருகின்ற 11-07-2017 (செவ்வாய்க்கிழமை ) நாளை காரைக்கால் மாவட்டம் முழுவதும் முழு கடையடைப்பு நடத்தபப்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.பகிர்ந்து மகிழுங்கள்
சமூக →
தொடர →
பகிர →

0 comments:

கருத்துரையிடுக

ஆங்கில உள்ளீடுகளை தமிழில் மாற்ற கீழே உள்ள பெட்டியை பயன்படுத்தவும்

Related Posts Plugin for WordPress, Blogger...